ராகுலை, கேரளா தேர்வு செய்தது அழிவுக்கான அறிகுறி: ராமச்சந்திர குஹா

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (102) | |
Advertisement
கோழிக்கோடு: '' காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை எம்.பி.,யாக தேர்வு செய்து கேரள மக்கள் அழிவுக்கான அறிகுறியை ஏற்படுத்தியுள்ளனர் '' என வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.வாரிசு அரசியல்வாதிகேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடக்கும் 'கேரள இலக்கிய திருவிழா' நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பார்லிமென்டிற்கு ராகுலை கேரள மக்கள் அனுப்பி
RamachandraGuha, Rahul, rahulgandhi, sonia, sonia gandhi,  PmModi, Modi, Pmnaendramodi, Narendramodi, congress, cong, dynast, India, nehru, Jawaharlal nehru, வாரிசு அரசியல்வாதி, ராமச்சந்திரகுஹா, வரலாற்றறிஞர், ராகுல், ராகுல்காந்தி, பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, பிரதமர் நரேந்திரமோடி சோனியா, சோனியாகாந்தி, காங்கிரஸ், நேரு, ஜவஹர்லால் நேரு, பிரதமர், காங்., இடதுசாரிகள், ஹிந்துத்துவா, இந்துத்துவா,  கேரளா, பேரழிவு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோழிக்கோடு: '' காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை எம்.பி.,யாக தேர்வு செய்து கேரள மக்கள் அழிவுக்கான அறிகுறியை ஏற்படுத்தியுள்ளனர் '' என வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.




வாரிசு அரசியல்வாதி


latest tamil news

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடக்கும் 'கேரள இலக்கிய திருவிழா' நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பார்லிமென்டிற்கு ராகுலை கேரள மக்கள் அனுப்பி வைத்தது ஏன்? தனிப்பட்ட முறையில், எனக்கு ராகுலுக்கு மீது எந்த விரோதம் இல்லை. அவர் நாகரீகமானவர். நன்கு படித்தவர். ஆனால், இந்தியாவிற்கு, 5ம் தலைமுறை வாரிசு அரசியல்வாதி தேவையில்லை. 2024 லும் ராகுலை கேரள மக்கள் மீண்டும் தேர்வு செய்தால், அது பிரதமர் மோடிக்கு சாதகமாக அமையும். மோடிக்கு பெரிய நன்மை கிடைப்பதற்கு முக்கிய காரணம், அவர் ராகுல் அல்ல. இந்தியாவிற்காக நிறைய நல்ல விஷயங்களை கேரளா செய்துள்ளது. ஆனால், பார்லிமென்டிற்கு ராகுலை தேர்வு செய்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.




ராகுலுக்கு பாதகம்


latest tamil news


பிரதமர் மோடி சுயமாக உருவான தலைவர். அவருக்கு நிர்வாக அனுபவம் உள்ளது. கடினமாக உழைக்கிறார். ஐரோப்பாவில் ஓய்வு எடுத்தது இல்லை. இதனை நான் உண்மையாக சொல்கிறேன். ராகுல், அறிவாளியாக இருக்கலாம் கடினமாக உழைக்கலாம். ஐரோப்பாவில் விடுமுறை எடுக்காமல் பணிபுரியலாம். ஆனால், சுயமான உருவான தலைவருக்கு எதிராக இருப்பது என்பது, ஒரே குடும்பத்தின் 5ம் தலைமுறை வாரிசு அரசியல்வாதியான ராகுலுக்கு பாதகமாகத்தான் இருக்கும்.




ஜனநாயக நாடு


latest tamil news


இந்தியா, இன்னும் ஜனநாயக நாடாக மாறி வருகிறது. ஆனால், சோனியா குடும்பத்தினர் இதனை உணரவில்லை. சோனியா டில்லியில் இருக்கிறார். உங்களது ராஜ்ஜியம் சுருங்கி வருகிறது. ஆனால், உங்களுக்கு ஜால்ரா போடுபவர்களோ, நீங்கள் தான் மன்னர் என புகழ்ந்து வருகின்றனர்.




நேரு குறித்து விமர்சனம் ஏன்



latest tamil news

ஜவஹர்லால் நேரு விஷயத்தில், அடுத்த 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் , மீண்டும் அவர் மீது பட்டுள்ளது. தேசிய விவாதத்தின் போது, ஒவ்வொரு முறையும் நேரு இழுக்கப்படுகிறார். காஷ்மீர் விவகாரம், சீன விவகாரம், முத்தலாக் விவகாரத்தில், ஒவ்வொரு முறையும் நேருவை மோடி விமர்சிப்பது ஏன்? இதற்கு காரணம், ராகுல் அரசியல் களத்தில் இருப்பதுதான். ஒரு வேலை ராகுல் இல்லையென்றால், மோடி தனது கொள்கை குறித்தும், ஏன் தோல்வியடைந்தோம் என்பது குறித்தும் பேச வேண்டியிருக்கும்.




ஹிந்துத்துவா எழுச்சி


இந்திய இடதுசாரிகள், இந்தியாவை விட மற்ற நாடுகளை அதிகம் நேசிக்கின்றனர். உலகளவில் ஆக்ரோஷமான தேசியவாதத்தின் எழுச்சி, அண்டை நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் எழுச்சி பெறுவது மற்றும் சில காரணங்களால், சமீப காலமாக இந்தியாவில், ஹிந்துத்துவா எழுச்சி பெறுவதற்கு காரணமாக உள்ளது. இவ்வாறு ராமச்சந்திர குஹா பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (102)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஜன-202016:54:46 IST Report Abuse
skv srinivasankrishnaveni நேருவும் இந்திராவும் போல என்று பலரும் சோனியா அவ வாரிசுகளை நம்பினாங்க இதுலே வயநாட்டிலே வோட்டுப்போடவே விரும்பாமல் பலர் சுற்றுலாவும்போயிட்டாங்கலாமா தெரியுமா வோட்டுப்போட்டதுகளெல்லாம் முஸ்லிம்களேதான் வயநாட்டுலே முஸ்லிம்களே அதிகம் தெரியுமோ
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஜன-202011:09:40 IST Report Abuse
Malick Raja இன்றிருப்போர் நாளை இல்லை .. இவ்வுலகம் யாருக்காகவும் நிலைப்படுத்தவில்லை . நிலையாகவும் இருக்கமுடியாது .. ஜனனம்,மரணம் பிறப்பு , இறப்பு என்பதை உணராதவர்கள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பது இயல்புதான் யாரும் நிரந்தர அறிவாளியாக இருக்கவோ ..முதுமை அடையாமலோ ..நோய்வாய்ப்படாமலோ இருக்கவே முடியாது . வேடிக்கை ,வினோதம் ,அலங்காரமாகவே இவ்வுலக வாழ்க்கை இருக்கும் இது குறைந்தபட்ச மனிதமாண்புள்ளோருக்கு மட்டுமே ஏற்புடையது
Rate this:
Cancel
adithyan - chennai,இந்தியா
19-ஜன-202009:31:20 IST Report Abuse
adithyan எல்லாருக்கும் தெரிந்ததை சொல்கிறார். அவரது ஜனனமே காங்கிரசை சம்ஹாரம் செய்யத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X