தலைமறைவான மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி உ.பி.,யில் கைது

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (33+ 57)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், சிறையிலிருந்து பரோலில் வந்து தப்பிய நபர் உ.பி.,மாநிலம் கான்ப்பூரில் கைது செய்யப்பட்டார்.






மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள மொமின்புரா பகுதியை சேர்ந்தவர் ஜலீஸ் அன்சாரி. டாக்டர் வேலை பார்த்து வந்த இவர், வெடிகுண்டுகளை வடிவமைத்து கொடுப்பதில் தேர்ச்சி பெற்றவர். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில் 52க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், அவருக்கு 'டாக்டர் பாம்' என பெயர் சூட்டி போலீசார் அழைத்து வந்தனர். தற்போது 68 வயதான ஜலீஸ் அன்சாரி, குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் 21 நாட்கள் பரோலில் மும்பை செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.




இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, தொழுகைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் தலைமறைவானார். இதனையடுத்து மும்பை போலீசார் மற்றும் மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஜலீஸ் அன்சாரி நேற்று உத்தர பிரதேச மாநிலம் கான்ப்பூரில் கைது செய்யப்பட்டார். அவரை ஜெய்ப்பூர் சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (33+ 57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - ghala,ஓமன்
19-ஜன-202012:47:20 IST Report Abuse
sankar ஏன்டா தப்பித்து போனாயே அது அப்படியே கேரளா இல்ல மேற்கு வங்கம் பக்கம் ஓடியிருக்க கூடாது , போயும் போய் உபி இக்கா போவே , அவரு ஏற்கனவே கால காண்டு இருகாப்புல ….
Rate this:
Share this comment
Cancel
Ganapathi Ramani - Chennai,இந்தியா
19-ஜன-202007:58:56 IST Report Abuse
Ganapathi Ramani நீதி மன்றங்களின்மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைய மேலும் ஓர் உதாரணம்
Rate this:
Share this comment
Cancel
18-ஜன-202022:36:13 IST Report Abuse
இயேசு பாவாடை இவன் தாடியை வெட்டி குல்லாவை கொளுத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X