பாஸ்டேக் இல்லாவிடில் இரட்டிப்பு கட்டணம்: சுங்கச்சாவடிகளில் வசூல் துவக்கம்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (46) | |
Advertisement
திருநெல்வேலி: இந்தியா முழுவதும் நேற்று(ஜன.,17) இரவு முதல் நான்கு வழிச்சாலைகளில் பாஸ்டேக் பதிவு செய்யாதவர்களுக்கு இருமடங்கு கட்டண வசூல் முறை அமலுக்கு வந்தது.இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் ஆவதால் பாஸ்டேக் என்னும் ஆன்லைன் முறை அமலுக்கு வந்தது. இதன்படி காரின் உரிமையாளர், ஏதாவது ஒரு வங்கிகணக்கில்

திருநெல்வேலி: இந்தியா முழுவதும் நேற்று(ஜன.,17) இரவு முதல் நான்கு வழிச்சாலைகளில் பாஸ்டேக் பதிவு செய்யாதவர்களுக்கு இருமடங்கு கட்டண வசூல் முறை அமலுக்கு வந்தது.
latest tamil news


இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் ஆவதால் பாஸ்டேக் என்னும் ஆன்லைன் முறை அமலுக்கு வந்தது. இதன்படி காரின் உரிமையாளர், ஏதாவது ஒரு வங்கிகணக்கில் பாஸ்டேக் கணக்கில் பணம் செலுத்தி அதற்கான ஸ்டிக்கர்களை பெற்றுக்கொள்வார்கள். வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை, சுங்கச்சாவடிகளில் உள்ள தானியங்கி ஸ்கேனிங் மூலம் கட்டணத்தை கணக்கிட்டு வங்கிகணக்கில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளப்படும். இதனால் நீண்டநேரம் வரிசையில் நின்று பணம் செலுத்த, கால தாமதம் ஏற்படாது. எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் பாஸ்டேக் முறையில் ஆன்லைன் கட்டணமுறைக்கு மாறும்படி கேட்டுக்கொண்டனர். இருப்பினும் தினசரி சுங்கச்சாவடிகளில் செல்வோர் பாஸ்டேக் முறைக்கு மாறினர். எப்போதாவது வரும் கார் உரிமையாளர்கள், அதற்கு காலஅவகாசம் கோரியிருந்தனர். ஏற்கனவே டிசம்பர் 15 வரை வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் ஜன.,15 உடன் முடிவுக்கு வந்தது. நேற்று 17 ம் தேதி இரவு முதல் பாஸ்டேக் மட்டுமே அமலில் உள்ளது.அதேநேரத்தில், பாஸ்டேக்கிற்கு பதில், பணம் செலுத்தும் கவுண்டர்களில் வழக்கமான கட்டணத்தை போல இருமடங்கு கட்டணம் வசூலித்தனர். குறிப்பாக, அதே மாவட்டத்தை சேர்ந்த வாடகை காருக்கு ஒரு முறை கடந்து செல்ல 45 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 90 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. ரிடர்ன் வர 135 ரூபாய் வசூலிக்கப்பட்ட கட்டணம் 270 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நாங்குநேரி சுங்கச்சாவடியில் இந்த அதிரடி கட்டண வசூல் நடக்கிறது. ஆனால் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.latest tamil news


இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய தென்மண்டல அதிகாரி பவன்குமாரிடம் கேட்டபோது, அப்படியா..இருக்காதே என மறுத்தார். இரட்டிப்பு கட்டண வசூல் குறித்து அதிகாரிகளுக்கே தெரியவில்லை.நாங்குநேரி சுங்கச்சாவடியில் கழிப்பறை கூட கிடையாது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு ஓட்டலோ, வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்துச்செல்லவோ எந்த அடிப்படை வசதியும் செய்துதரப்படாமல் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக உடைந்த பெயர் பலகைகள் இன்னமும் சரிசெய்யப்படவில்லை. விபத்துச்சாலைகள் இன்னமும் சீர்செய்யப்படவில்லை. பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை முழுமையாக அமைக்கப்படாமல் மழைக்கும் வெயிலுக்கு காயவேண்டியுள்ளது.latest tamil news


எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்வதற்கு வாகனஓட்டிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.


latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (46)

Krishna - bangalore,இந்தியா
19-ஜன-202011:47:44 IST Report Abuse
Krishna Abolish Tolls As Vehicle Tax Collections Itself are Heavy
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஜன-202011:38:39 IST Report Abuse
Malick Raja நெடுஞ்சாலையில் வரிவசூலிப்பது கொடுஞ்செயல் என்பது குறைய பட்ச அறிவுடையோருக்கு மட்டுமே தெரியும் என்பதால்மட்டும் அணைத்து சாலைகளிலும் அநியாயமாக சுங்கச்சாவடி கொள்ளை நடக்கிறது .. அதற்கு ஒரு நாள் ஒரேநாளில் முற்றுப்புள்ளி வந்தே தீரும் .. வாழ்க ..வெல்க .வளர்க என்றென்றும் நீதியின் எழுச்சி ..
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
19-ஜன-202010:06:04 IST Report Abuse
chakra இந்தியாவை ஆட்சி செய்வது பிஜேபியோ அல்லது கொங்கிரஸோ அல்ல கார்போரேட்ஸ்தான் தைரியம் இருந்தால் அமிட்ச இந்த கொள்ளையை தடுக்கட்டுமே பார்ப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X