அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணி குறித்து பேசுவதை தவிருங்கள் : திமுக-காங்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Added : ஜன 18, 2020 | கருத்துகள் (66)
Share
Advertisement
சென்னை : கூட்டணி குறித்து பேசுவதை திமுக மற்றும் காங்., கட்சியினர் தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர், திமுகவை விமர்சித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் திமுக- காங்., கூட்டணியில்

இந்த செய்தியை கேட்க

சென்னை : கூட்டணி குறித்து பேசுவதை திமுக மற்றும் காங்., கட்சியினர் தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



latest tamil news




உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர், திமுகவை விமர்சித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் திமுக- காங்., கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்., தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினர். ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்., தலைவர்கள், திமுக-காங்., கூட்டணி பலமாக உள்ளதாகவும், இனி வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிடும் எனவும் தெரிவித்தனர். திமுக நிலைப்பாட்டிற்கு காங்., கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.


latest tamil news



காங்., தலைவர்கள் உடனான சந்திப்பிற்கு பிறகு ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூட்டணி குறித்த கருத்துக்களை திமுக மற்றும் காங்., கட்சிகளை சேர்ந்தவர்கள் பொதுவெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கே.எஸ்.அழகிரியின் அறிக்கை, சில நாட்களாக இருதரப்பிலும் விரும்பத்தகாத கருத்து பரிமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. கூட்டணி குறித்து பொது வெளியில் விவாதிப்பதை நான் சிறிதும் விரும்பவில்லை. திமுக- காங்., கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என கே.எஸ்.அழகிரி என்னிடம் பேசி உள்ளார். திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என குள்ளநரி சக்திகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
19-ஜன-202006:48:42 IST Report Abuse
konanki மூல பத்ரம் எங்கே
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
18-ஜன-202021:53:13 IST Report Abuse
KavikumarRam சுடலை கண்ல ஒரு மரண பீதி தெரிகிறதே??? துரைமுருகன் விட்ட சவுண்டுக்கு எதிர் சவுண்டாவுல்லா இருக்கு. சுடலைவ் வீக்னெசு வீணாப்போச்சே.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
18-ஜன-202021:49:54 IST Report Abuse
தாண்டவக்கோன் //திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என """குள்ளநரிகள்""" ஏங்கிக் கொண்டிருக்கின்றன.// RSS-BJP ரெண்டுந்தான் அந்த நரிங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X