மகள் பலாத்காரத்தை தடுத்த தாய் அடித்துக் கொலை : உ.பி.,யில் அடுத்த பயங்கரம்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (75)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கான்பூர் : உ.பி.,யில் உன்னவ் பலாத்கார விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், கான்பூரில் அதே போன்ற அடுத்த கொடூரம் அரங்கேறி உள்ளது.





2018 ம் ஆண்டு, மெஹ்ரூப் மற்றும் பாபு ஆகியோர் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அச்சிறுமியை மீட்டுள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த இருவரும், தங்களுக்கு எதிராக சாட்சி அளித்த சிறுமியின் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். ஆனால் சிறுமியின் தாயும், அவரது உறவுக்கார பெண்ணும் அதற்கு பயப்படவில்லை.






இந்நிலையில் குற்றவாளிகள், 6 பேர் கொண்ட கும்பலை அழைத்து வந்து, வீட்டில் இருந்த சிறுமியின் தாய் மற்றும் உறவுக்கார பெண்ணை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். குற்றவாளிகளில் ஒருவன் சிறுமியின் தாயின் முகத்தில் பூட்ஸ் காலால் மிதித்துள்ளான். இதில் படுகாயம் அடைந்த சிறுமியின் தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஜன.,9 ம் தேதி நடந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
24-ஜன-202018:42:23 IST Report Abuse
வந்தியதேவன் “ஒரு நாடு..ன்னா, சிலபல குற்றங்கள் நடக்கதானே செய்யும்...”னு... அல்லக்கைங்க, நொள்ளக்கைங்க, பக்தாஸ், காவி அடிமைகள்... கூவுவானுங்க பாருங்களேன்... மனிதநேயமும், மனிதாபிமானமும் இல்லாமல் இப்படி கூவுபவர்களை... பெத்தாளங்களா... இல்ல.. செஞ்சாங்களா...?ன்னு தெரியல...? சக்தி வடிவம் என்று சொல்லிக் கொள்கிற... பீத்திக்கிற... ஒரு பெண்ணிற்கு கொடுமை நடக்கிறது... என்றால் பொங்கி எழாதவர்கள் ஒரு தாயின் வயிற்றில்தான் பிறந்தார்களா... இல்ல... பேயின் வயிற்றில்தான் பிறந்தார்களா...ன்னு தெரியல...?
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
24-ஜன-202017:09:51 IST Report Abuse
Divahar யாரும் வழக்கு போடக்கூடாது என நினைத்து இதுமாதிரி குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுக்கிறார்களா?
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
24-ஜன-202017:01:52 IST Report Abuse
S.P. Barucha பதிவை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X