டில்லி தேர்தலால் காங்.,ல் குழப்பம்: சோனியா வீடு முன் தொண்டர்கள் போராட்டம்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (11)
Advertisement

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலில் சீட் ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக காங்., தலைவர் சோனியாவின் வீடு முன், கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.






டில்லி சட்டசபை தேர்தல் பிப்.,8 ம் தேதி நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுக்கள் பிப்.,11 அன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பட்டேல் நகர் மற்றும் கரவால் நகர் தொகுதிகளில் அரவிந்த் சிங் மற்றும் ஹர்மன் சிங்கிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என தகவல் வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த பட்டேல் நகர் மற்றும் கரவால் நகர் தொகுதிகளை சேர்ந்த காங்., தொண்டர்கள், சோனியா வீடு முன் குவிந்து போராட்டம் நடத்தினர்.





தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து டில்லி காங்., தலைவரான சுபாஷ் சோப்ராவின் காரையும் மறித்து அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை சமாதானப்படுத்த முயன்ற சுபாஷ், இன்று மாலையே இறுதி அறிவிப்பு வெளியாகும். நாம் ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறோம். அதனால் சில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டன என்றார். இதனை ஏற்க மறுத்து காங்., தொண்டர்கள் கட்சி மற்றும் கட்சி தலைவர் சோனியாவுக்கு எதிராக முழக்கமிட்டது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
19-ஜன-202012:58:14 IST Report Abuse
bal எப்படியும் தோக்கப்போறாங்க...இது என்ன நாடகம்.
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
19-ஜன-202010:37:36 IST Report Abuse
R. Vidya Sagar ராகுல் எப்பொழுது பிரசாரம் துவங்குவார் என்று பாஜக ஆவலுடன் எதிர் பார்க்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
19-ஜன-202009:10:48 IST Report Abuse
Allah Daniel என்ன ஒரு தியமுக/காங்கிரஸ் சொம்பையும் காணும்??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X