இந்திய-சீனா இடையே எல்லை உண்டா?: மோடியிடம் கேட்ட டிரம்ப்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (27)
Advertisement
இந்திய-சீனா இடையே எல்லை உண்டா?: மோடியிடம் கேட்ட டிரம்ப்

வாஷிங்டன்: சீனாவுடன் இந்தியா எந்த எல்லையையும் பகிர்ந்து கொள்ளவில்லையே என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை கேட்டு பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்ததாக புத்தகம் ஒன்றின் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.





புலிட்சர் விருது பெற்ற அமெரிக்க பத்திரிக்கையாளர்களான பிலிப் ராக்கர், கரோல் டி லியோனிங் ஆகியோர், “மிகவும் நிலையான மேதை” என்ற தலைப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து புத்தகம் எழுதியுள்ளனர். அதில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற முதல் 3 ஆண்டுகளில் அவரது குழப்பம் நிறைந்த பேச்சுக்கள், அறியாமை தொடர்பான சுவாரசியமான சம்பவங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் அடிக்கடி வெளிநாடுகளில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு, ராஜாங்க ரீதியான உறவுகள் குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இதில் ஒரு முறை அதிபர் டிரம்ப் - மோடி சந்திப்பின் போது டிரம்ப், 'இந்தியாவின் வலது பக்கத்தில் சீனா இருந்த போதிலும், இருநாடுகளுக்கும் இடையே எல்லைகள் இல்லையா?' என மோடியிடம் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ந்து போனார் பிரதமர் மோடி.

இந்தியாவும், சீனாவும் 3,488 கிமீ எல்லையை கொண்டுள்ளன. மேலும், உலகத்திலேயே இருநாடுகளும் 9வது மிக நீளமான எல்லையை கொண்டுள்ளன. இந்தியா, சீனா எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. இதைபற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
24-ஜன-202010:31:43 IST Report Abuse
Ramalingam Shanmugam நம்ம தலைவர்கிட்டே கேளுங்க குடியரசு தினம் எப்போ என்று ?
Rate this:
Share this comment
Cancel
19-ஜன-202014:40:54 IST Report Abuse
ஆப்பு இதுல ஒரு தப்பும் இல்லை. நம்ம தலைவர் அதிர்ச்சி அடைந்ததுதான் தப்பு. மோடி கிட்டே நான் போய் எங்கப்பா பேரைக் கேட்டு அவர் தெரியலைன்னு சொன்னா நான் அதிர்ச்சி அடைய முடியுமா? அவிங்கவங்க பிரச்னை அவங்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
கேள்வியின்நாயகன் அறிவுப்பூர்வமான கேள்வி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X