மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
மோடி, ஐ.நா., பாதுகாப்பு_கவுன்சில், மத்திய_அமைச்சரவை,  விரிவாக்கம்,

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை, விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார மந்தநிலை, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களை திறமையாக கையாள, அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் தேவை என மத்திய அரசு நினைப்பதால், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைவர் கே.வி.காமத், பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்தபோது, மத்திய அமைச்சரவையில், சில துறை சார்ந்த நிபுணர்களுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டன. அந்த வரிசையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் தலைவராக பதவி வகித்த ஹர்தீப் சிங் பூரி, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் முன்னாள் பத்திரிகையாளரான எம்.ஜே.அக்பர் ஆகியோருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டன.


பொறுப்பேற்பு


கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவது முறை பிரதமராக மோடி பதவி ஏற்ற பின், உருவாக்கப்பட்ட அமைச்சரவையில், பா.ஜ.,வை சேர்ந்த 72 பேர், அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம், கடந்த, 3ம் தேதி, டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொருளாதார மந்தநிலை, மத்திய அரசுக்கு மிகப் பெரிய தலைவலியாக உருவாகி உள்ளது, இவற்றை திறமையாக கையாள, அனுபவம்மிக்க நிபுணர்கள், அமைச்சரவையில் சேர்க்கப்பட வேண்டும் என, அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


எதிர்பார்ப்பு


இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, பொருளாதார மந்தநிலையை சமாளிக்க, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் இன்போசிஸ் நிறுவன முன்னாள் தலைவரும், 'பிரிக்ஸ்' வங்கியின் தலைவருமான கே.வி.காமத்துக்கு, மத்திய நிதித்துறையில், இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குடியுரிமை சட்ட திருத்த போராட்டங்களை கையாள, முன்னாள் பத்திரிகையாளரும், வலதுசாரி சிந்தனையாளருமான ஸ்வபன் தாஸ்குப்தாவுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர, நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், தென் மாநிலத்தை சேர்ந்த துறை சார்ந்த வல்லுனர் ஒருவருக்கும், அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், முன்னாள் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இம்முறை நடைபெறவுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில், துறை சார்ந்த வல்லுனர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க, பிரதமர் முடிவு செய்துள்ளார். அதோடு, அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலருக்கும், இம்முறை வாய்ப்பளிக்கப்படும் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜன-202000:35:01 IST Report Abuse
Vittalanand Seithi therintha vudaneye maram vetti dellikku padai yeduththu thol veluthruhkkonda than maganukku rail thunai amaichar padavi ketpaar. Rail neer business nadakka vendume !!
Rate this:
Share this comment
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜன-202000:35:01 IST Report Abuse
Vittalanand Seithi therintha vudaneye maram vetti dellikku padai yeduththu thol veluthruhkkonda than maganukku rail thunai amaichar padavi ketpaar. Rail neer business nadakka vendume !!
Rate this:
Share this comment
Cancel
rajan - erode,இந்தியா
19-ஜன-202014:50:29 IST Report Abuse
rajan தென் மாநிலத்தை சேர்ந்த துறை சார்ந்த வல்லுனர் ஒருவருக்கும், அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது இருக்கவே இருக்கிறார் சகலகலா வல்லவர் h ராஜா இவரை துணை பிரதமராக்கினால் ஒரே நாளில் எல்லாம் சரியாகிவிடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X