சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெங்களூரில் கைதான பயங்கரவாதிகளை சென்னையில் விசாரிக்க போலீசார் தீவிரம்!

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (12)
Advertisement
பெங்களூரில் கைதானவர்களை சென்னையில் விசாரிக்க தீவிரம்

சென்னை : ஹிந்து அமைப்பு தலைவர்கள் மற்றும் போலீசாரை படுகொலை செய்ய திட்டமிட்டது; குடியரசு தினத்தில், தென் மாநிலங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த, 17 பேர் சதி தீட்டியது தொடர்பாக, பெங்களூரில் கைதான பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்த, சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

உண்மையை கக்கும் வரை, அவர்களை நெம்பி எடுக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, பெங்களூரில், பயங்கரவாத செயல்களுக்கு, இளைஞர்களை மூளைச் சலவை செய்தவரை, கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த, 2012ல், நாகப்பட்டினம், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி; வேலுாரில், மருத்துவ அணி செயலர் அரவிந்த் ரெட்டி; 2013ல், பரமக்குடி நகராட்சி பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகன்.சேலத்தில், ஆடிட்டர்ரமேஷ்; வேலுாரில், ஹிந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன்; ராமேஸ்வரத்தில், குட்டநம்பு ஆகியோர், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த படுகொலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 10க்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்தனர். மேலும், திருவள்ளூர் மாவட்ட, ஹிந்து முன்னணி தலைவராக இருந்த, சுரேஷ்குமார், 2014ல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.


ரகசிய இடம்இந்த கொலை வழக்கில், சென்னை, கடலுார், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.இவர்களில், ஜாமினில் வெளிவந்த சையது அலி நவாஸ், 25, அப்துல் ஷமீம், 25, காஜாமொய்தீன், 47, ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை, தமிழக, 'கியூ' பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இதற்கிடையே, இவர்களின் கூட்டாளிகளான முகமது ஹனிப் கான், 29, இம்ரான் கான், 32, முகமது ஜெயித், 24, ஆகியோர், பெங்களூரில் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், பெங்களூரில் கார் ஓட்டுனராக வேலை பார்த்தபடி பதுங்கியிருந்த இஜாஸ் பாஷா, 46,என்பவரும் கைது செய்யப்பட்டார்.டில்லியில் பதுங்கியிருந்த காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் ஆகியோரை, அம்மாநில போலீசார் கைதுசெய்தனர்.பயங்கரவாதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால், போலீசார் மீது ஆத்திரமடைந்த அப்துல் ஷமீம், 25, தவுபீக், 27, ஆகியோர், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடி யில், சிறப்பு எஸ்.ஐ.,வில்சன் என்பவரை சுட்டுக் கொன்றனர்.இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில், கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களுடன், பெங்க ளூரில் கைது செய்யப்பட்ட, ஹனீப் கான் உள்ளிட்ட மூன்று பேர் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட லியாகத் அலி ஆகியோரை, தமிழக கியூ பிரிவு போலீசார், 10 நாட்கள் காவலில் எடுத்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


கொல்ல திட்டம்அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம்:'ஜிகாத்' எனும் இஸ்லாம் எதிரிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில், ஹிந்து தலைவர்களை கொல்ல திட்டமிட்டோம்.அதேபோல், இலங்கையில் நடத்தியதை போல், தமிழகம், கேரளா, கர்நாடகா, டில்லி, உத்தர பிரதேசம் மற்றும் பிரதமர் மோடி பிறந்த குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் தேவாலயங்களில், தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.எங்களது கூட்டாளிகளை தொடர்ந்து, தமிழக போலீசார் கைது செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பணியில் உள்ள, 20 போலீசாரை படுகொலை செய்ய திட்டமிட்டோம். இதற்காக, நேபாளம், காத்மாண்டு நகரில், 17 பேர் பயிற்சி மற்றும்ஒத்திகை மேற்கொண்டோம். தற்கொலை படை தாக்குதல், குண்டு வெடிப்பு நடத்திய பின், பாகிஸ்தானுக்கு தப்பி விட முடிவு செய்திருந்தோம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


மூன்று பேர் கைதுஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு குருப்பன்பாளை பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதி மெகபூப் பாஷா, 45, என்பவரை, கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர். இவருடன், மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரில் இவர், 17 இளைஞர்களை மூளை சலவை செய்து, அவர்களை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளார். இதில் அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோரும் அடங்குவர்.மெகபூப் பாஷாவிடம், கர்நாடக போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழக போலீஸ் அதிகாரிகளும், அங்கு விரைந்து உள்ளனர்.அதேபோல், டில்லியில் கைது செய்யப்பட்ட இருவரை, சென்னைக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்த, தமிழக போலீசார், நாளை டில்லி செல்கின்றனர்.

ஹிந்து அமைப்பு தலைவர்களின் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சிறப்பு எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், அவர்களின் கூட்டாளிகளிடம் விசாரிக்கவும், தமிழக கியூ பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.அதற்காக, அவர்களையும் சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தவும் திட்டமிட்டுஉள்ளனர்.என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகளும், நாடு முழுதும் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க, சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.


காஞ்சிபுரம் கோவில்களுக்கு போலீஸ் பாதுகாப்புகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் உள்ளே சென்றதாகதகவல் பரவியது.இது குறித்து தகவல் அறிந்த, காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, உடனடியாக கோவிலை சுற்றிபார்வையிட்டார். தொடர்ந்து, கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்க உத்தரவிட்டார்.இதேபோல், காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், கைலாசநாதர் என, நான்கு கோவில்களுக்கும், போலீஸ் பாதுகாப்புஅளிக்கப்பட்டு உள்ளது.காமாட்சி அம்மன் கோவில் நான்கு ராஜகோபுர வழிகளிலும் போலீசார் பாதுகாப்பில் உள்ளனர்.கோவிலுக்கு பைகளுடன் செல்லும் பக்தர்கள், பரிசோதனைக்கு பின்னரே, உள்ளே செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.'அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பயங்கரவாதிகளாக இருக்கலாம். ஆதலால், மறு உத்தரவு வரும் வரை இந்த பாதுகாப்பு தொடரும்' என, போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.இந்நிலையில், பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.


பெங்களூரில் சதி திட்டம்குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, 2019 டிச., 22ல், பெங்களூரு டவுன் ஹால் முன் நடந்த விழிப்புணர்வில் பங்கேற்ற, ஆர்.எஸ்.எஸ்., இயக்க பிரமுகர் வருண் என்பவரை கொலை செய்ய முயற்சி நடந்தது. இது தொடர்பாக,எஸ்.டி.பி.ஐ., கட்சியைச் சேர்ந்த ஆறு பேரை, அம்மாநில போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு, கே.ஜி.ஹள்ளியின் அக்பர் பாஷா,ஆர்.டி.நகரின் இர்பான் தலைவர்களாக இருந்துள்ளனர். பெங்களூரில், கார் ஓட்டுனர், சமையல் காரர், தோட்டக்காரர் என, பல்வேறு வேலைகளை செய்து, பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக, ஆறு பேரும், போலீசாரிடம்தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜன-202016:45:57 IST Report Abuse
Endrum Indian இந்த போட்டோ மகாபலிபுரம்???தீவிரவாதிகளை பிடித்தது பெங்களூர்??இந்தியாவின் ஜல்லடை ஓட்டை சட்டத்தில் இருப்பது ஜாமீன்??எல்லாம் அரசியல்வாதிகளினாலே தான் இந்த ஓட்டை சட்டம்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-ஜன-202009:32:01 IST Report Abuse
தாண்டவக்கோன் நல்லா ஆயுளுக்கும் வலிக்கிற மாதிரி நெம்புங்க
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
19-ஜன-202014:29:23 IST Report Abuse
 Muruga Velஅவுங்க தானே அதுல கில்லாடி .....
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
19-ஜன-202018:43:29 IST Report Abuse
கதிரழகன், SSLCஅரபி அடிமை கடையில சாமான் வாங்க கூடாது. அரபி அடிமைங்கள வீட்டுல வேலைக்கு வெக்க கூடாது. ஜமா அத் எல்லாம் கலைக்கணும். இனிமே தப்பு செய்ய மாட்டம், தப்பு செய்யறவனை நாங்களே போலீசுல பிடிச்சு கொடுப்பம் ன்னு சொல்லி செஞ்சுக்காட்டினாத்தான் மன்னிப்பு இல்லாட்டி காலி....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
19-ஜன-202008:43:32 IST Report Abuse
தமிழ்வேள் தமிழகத்துக்குள்ளேயே மேல்விஷாரம் என்ற ஒரு குட்டி பாகிஸ்தான் உள்ளது அங்கே இந்துக்களுக்கு பாதுகாப்பு கிடையாது சென்னையிலிருந்து 125 கி .மி மட்டுமே தொலைவு இந்த ஊர் ஜமா அத் ஐ மீறி எந்த போலீசும் உள்ளே நுழைய முடியாது .....பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு இங்கே சகலவிதமான பாதுகாப்பு உபச்சாரமும் நடக்கும் ..இவை அனைத்தும் தெரிந்தே பாஜக தலைமைக்கு சொல்லாமல் வைத்துள்ளதா ? அல்லது தலைமை கண்டுகொள்ளவில்லையா ? மூர்க்க மதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றால் மீண்டும் பாரதம் ஒரு பேரழிவை சந்திக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X