'இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம்'

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (40)
Advertisement
#Nitin Gadkari# #indian economy# 'இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம்'

இந்தூர்: ''இந்தியாவை, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் தான். எனினும், அது நடக்காத காரியம் அல்ல,'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.மத்திய பிரதேச மாநிலத்தில், இந்துார் மேலாண்மை சங்கத்தின், 29வது சர்வதேச மாநாடு நடைபெற்றது.





இதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:வரும், 2024ம் ஆண்டுக்குள், இந்தியாவை, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது என்பது, கடினமான இலக்கு தான். எனினும், அது நடக்காத காரியம் அல்ல.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியை குறைத்துவிட்டால், அந்த இலக்கை நாம் எளிதில் எட்டிவிடலாம். நம் நாட்டில், ஏராளமான வளங்களும், உற்பத்தி செய்யும் திறனும் உள்ளன.எனினும், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், நிலக்கரி, செம்பு, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய, கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறோம். நம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால், இறக்குமதிக்கு அதிக அளவில் செலவு செய்வதை நாம் முதலில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

சிரமங்களையும், சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றும் திறன்கொண்ட இளைய தலைவர்களிடம், இந்தியாவின் எதிர்காலத்தை நான் காண்கிறேன்.நம் நாட்டில், மூலதனம், வளம், தொழில்நுட்பம் என, எதிலும் பற்றாக்குறை இல்லை. ஆனால், பல துறைகளில், சரியான பார்வை மற்றும் தலைமை இல்லை என்பது ஒரு குறைபாடு தான்.ஏற்றுமதியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். அது, ஐந்து கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - MUMBAI,இந்தியா
19-ஜன-202001:25:18 IST Report Abuse
HSR துக்ளக் படித்து முட்டாளாக ஆனவனும் இல்லை முரசுஒலி படித்து அறிவாளி ஆனவனும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-202001:06:33 IST Report Abuse
தமிழ்வேல் சீனாக்காரன் குப்பையை முதல்ல நிறுத்துங்க.
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
18-ஜன-202023:15:09 IST Report Abuse
Vena Suna ஒரு பக்கம் ராணுவ மற்றும் எல்லா படைகளின் தலைவர்,தீவிரவாதத்தை ஒழிப்பது கடினம் என்கிறார். இப்போது இவர் பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் என்கிறார். இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தால் என்னாவது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X