அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., வியூகம்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
DMK, ADMK, உள்ளாட்சி_தேர்தல், வியூகம், அதிமுக, கவுன்சிலர், திமுக
 
தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., வியூகம்

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ள, ஒன்பது மாவட்டங்களில், விரைவில் தேர்தலை நடத்தி, தி.மு.க., கூட்டணியை விட, அதிக இடங்களை கைப்பற்ற, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.

சென்னையில், ஊரக உள்ளாட்சி பதவிகள் கிடையாது. எனவே, இம்மாவட்டங்கள் தவிர்த்து, மீதமுள்ள, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த மாதம் நடந்தது.

தேர்தலில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், அ.தி.மு.க., கூட்டணியை விட, தி.மு.க., கூட்டணி, கூடுதல் இடங்களை கைப்பற்றியது. தி.மு.க., கூட்டணி அதிக இடங்களை பிடித்தும், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை பெறவிடாமல் தடுத்து, அ.தி.மு.க.,வே அதிக இடங்களை கைப்பற்றியது.
எனினும், அதிகார பலம் மற்றும் பண பலத்தால், கவுன்சிலர்களை விலை பேசி, தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியதாக, தி.மு.க., குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் உள்ள ஒன்பது மாவட்டங்களில், விரைவாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், அந்த மாவட்டங்களில், கவுன்சிலர் பதவிகளை அதிகளவில் கைப்பற்றி, தி.மு.க.,வை வீழ்த்தவும், அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
19-ஜன-202021:18:50 IST Report Abuse
Anandan அதிகாரிகளை மிரட்டி ஓரளவு சாதித்தாயிற்று இந்த முறை பார்ப்போம்.
Rate this:
Cancel
19-ஜன-202015:08:17 IST Report Abuse
பண்டாரம் ஏற்கெனவே தானா பாதி அழிஞ்சத அழிக்க வியூகம் எதுக்கு. சும்மா உக்காந்து வேடிக்கை பாத்தாலே போதுமே.
Rate this:
Cancel
mutharasu - puliangudi,tirunelveli,இந்தியா
19-ஜன-202012:03:41 IST Report Abuse
mutharasu தென்காசி மாவட்டம் புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X