இப்படி செய்யலாமா?

Added : ஜன 18, 2020 | கருத்துகள் (2)
Advertisement
  இப்படி செய்யலாமா?

இப்படி செய்யலாமா?

தமிழக சட்டசபையில், இம்மாதம், 6ல், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசிய உரை, மத்திய உள்துறை அமைச்சகத்தில் விரிவாக அலசப்பட்டு வருகிறது. இந்த உரையில், 'தமிழகத்தில், கடந்த, 30 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகளுக்கு, இரட்டை குடியுரிமை, அதாவது இலங்கை குடியுரிமை பெற்றிருந்தாலும், இந்தியாவும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இரட்டை குடியுரிமை, இந்திய அரசியல் சாசனத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தில் கூடாது என சொல்லப்பட்டுள்ள விஷயத்தை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என, கவர்னர் எப்படி உரையில் குறிப்பிட முடியும். அதோடு இலங்கையிலும் இரட்டை குடியுரிமை கிடையாது என்கின்றனர் உள்துறை அமைச்சக அதிகாரிகள்.கவர்னர் பதவி ஏற்றுக் கொள்ளும் போது, 'இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பேன்' என, உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார். அப்படியிருக்க, அதை மீறும் வாசகங்களை, அவர் உரையில் படிக்கலாமா எனவும், அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.கவர்னர், சட்டசபையில் வாசிக்கும் உரையை, மாநில அரசு அதிகாரிகள் தான் எழுதி கொடுக்கின்றனர். கவர்னர் சொந்தமாக எதையும் எழுதி சபையில் படிக்க முடியாது. ஆனால், இப்படி சர்ச்சைக்குரிய விஷயங்கள் உரையில் இருந்தால், சில கவர்னர்கள் அதைப் படிக்காமல் தவிர்த்துள்ளனர்.முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், கேரள கவர்னராக இருந்தவருமான சதாசிவம், கேரள அரசு எழுதிக் கொடுத்த உரையில், மத்திய அரசை விமர்சிக்கும் பகுதிகளை படிக்காமல் தவிர்த்துவிட்டார். ஆக, தமிழக அரசு, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என சொல்லி, தனக்கு அரசியல் ஆதாயம் தேடி, கவர்னரை பிரச்னையில் சிக்க வைத்துவிட்டது.

பாதுகாப்பு வாபஸ் ஏன்?

தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும், மத்திய அரசு அளித்து வந்த துணை ராணுவ பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு, அரசியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படுகின்றன. சமீபத்தில், டில்லி வந்திருந்த தமிழக முதல்வர் இ.பி.எஸ்., உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், தமிழக அரசியல் குறித்து, பல விஷயங்கள் அலசப்பட்டன. அப்போது, இந்த இரு தலைவர்களுக்கும் தரப்பட்டு வந்த துணை ராணுவத்தினர் பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டதாம். இதன் பிறகு தான் பன்னீர் செல்வத்துக்கும், ஸ்டாலினுக்குமான பாதுகாப்பு வாபஸ் ஆனதாம்.அ.தி.மு.க.,விற்குள் இருக்கும் கோஷ்டிப் பூசலை, பா.ஜ., சரியாக பயன்படுத்திக் கொள்கிறது. 'பன்னீர்செல்வத்துக்கு மட்டும் வாபஸ் பெற்றால் சரியாக இருக்காது; அதனால், ஸ்டாலினுக்கும் சேர்த்து உத்தரவிடப்பட்டது' என, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 'அப்படி எல்லாம் கிடையாது. சோனியா, ராகுல் உட்பட பல தலைவர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 'யார் யாருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், இப்போது தரப்பட்டு வருவதை யாருக்கு குறைக்க வேண்டும் என்பதை, உள்துறை அமைச்சக கமிட்டி தான் முடிவு செய்யும்.தமிழக விவகாரத்திலும், இந்த கமிட்டி தான் முடிவு செய்துள்ளது' என, மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.எது எப்படியோ, தமிழக அரசியல்வாதிகள் மத்தியில், ஒரு சந்தேகத்தை விதைத்துவிட்டது மத்திய அரசின் நடவடிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
19-ஜன-202010:05:46 IST Report Abuse
Suri இந்த இரட்டை குடியுரிமை அடிமை அண்ணா தி மு க வின் இரட்டை வேடம் என்பது மக்களுக்கு நன்றாக புரியும்... அது நடந்தேற வாய்ப்பே இல்லை எனபது அரசியல் அறிவு கொஞ்சமே கொஞ்சம் இருப்பவர்கள் கூட புரிந்துகொள்வார்கள்... பீ ஜெ பீ க்கு பல்லக்கு தூக்க வேண்டும்...மக்கள் மத்தியில் அடி வாங்க கூடாது.. விளைவு இப்படிப்பட்ட அரசியல் சாசன விதி மீறல்... எழுதி கொடுத்த IAS அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.. படித்த கவர்னரை நீக்க வேண்டும்.....
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
24-ஜன-202019:23:53 IST Report Abuse
கல்யாணராமன் சு.சரி அறிவே இல்லாத அதிமுகவுக்குத்தான் தெரியலே ............. அறிவுக்கொழுந்துகளான உங்க திமுகவுக்கு புத்தி எங்க போச்சு? சுடலையில் ஆரம்பிச்சு எல்லாருந்தானே இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை கொடுக்கணும்னு கூவினாங்க ? ........... அப்போ அவங்களுக்கும்அரசியல் சாசனத்தை பத்தி ஒண்ணும் தெரியாதுன்னு வெச்சுக்கலாமா? ...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X