அரசியல் செய்தி

தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (72)
Advertisement
தஞ்சை, பெரிய_கோவில்,ஸ்டாலின், தமிழில், குடமுழுக்கு, கோரிக்கை

சென்னை: 'தஞ்சை பெருவுடையார் கோவில் திருக்குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளார்.

அவரது அறிக்கை:தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா, பிப்ரவரி, 5ல் நடக்க உள்ளது. இவ்விழாவை, தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு, மாநாடு நடத்துகிறது. இம்மாநாடு முன் வைத்திருக்கும் கோரிக்கை, அனைவருடைய கவனத்திற்குமானது. தமிழரின் பண்பாட்டு சின்னமாக, 1,000 ஆண்டுகளைக் கடந்த பேரதிசயமாக, தஞ்சைப் பெருவுடையார் கோவில் திகழ்கிறது.


கடந்த கால வரலாறு


இக்கோவிலை கட்டிய, ராஜராஜசோழன் சிலைக்கே, கோவில் வளாகத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது, கடந்த கால வரலாறு.அதனால் தான், கோவில் அருகிலேயே, அதை கட்டிய மாமன்னனின் சிலையை, மக்கள் காணும் வகையில் நிறுவி, கருணாநிதி பூங்கா அமைத்தார். கோவில்களில், தமிழ் வழிபாட்டையும், சமூக நீதியையும் நிலைநாட்டுவது, தொடர்ச்சியான பண்பாட்டுப் போராட்டமாகும்.தமிழில் அர்ச்சனை என்பதில் துவங்கி, அனைத்து சமுதாயத் தமிழர்களும், அர்ச்சகர் ஆவதற்கான சட்டம் வரை, கோவில்களில், தமிழர் வழிபாட்டு முறையை நிலைநாட்டுவதில், தி.மு.க., அரசு உறுதியான முயற்சிகளை மேற்கொண்டது.அதற்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில், தி.மு.க., அரசு நடத்திய, சட்டப் போராட்டங்களை நாடறியும். தொல் தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மீட்கும் முயற்சிக்கான போராட்டங்கள், காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றன.


கோரிக்கை



அந்த வகையில், தஞ்சைப் பெருவுடையார் கோவில், திருக்குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த வலியுறுத்தி நடக்கும் மாநாடு, வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்த மாநாட்டின் கோரிக்கையை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202015:40:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உனக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை அப்படி இருக்க இந்த கூப்பாடு யாரை ஏமாற்ற.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
20-ஜன-202006:28:09 IST Report Abuse
Nallavan Nallavan தமிழில் துதிக்கலாம் ...... ஆனால் ஆகம விதிப்படி சொல்லப்படவேண்டிய சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையான மந்திரங்கள் தமிழில் இல்லை .....
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-ஜன-202021:50:16 IST Report Abuse
தாண்டவக்கோன் உனக்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கும் என்ன தொடர்பு ? 😡😡😡😡😡
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X