அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - காங்., இடையே முடிந்தது 'பேட்ச் ஒர்க்!' : 'வாங்கி'க் கட்டினார் கமல்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (50+ 124)
Advertisement
kamal,DMk, Stalin, தி.மு.க.,  காங்., பேட்ச்_ஒர்க், முடிந்தது,ஸ்டாலின், கருத்து_பரிமாற்றம்

சென்னை : தி.மு.க., - காங்., இடையே 'பேட்ச் ஒர்க்' எனப்படும் ஒட்டு வேலை நேற்று சுமுகமாக முடிந்தது. இரண்டு நாள் நாடகத்துக்கு இதன் வாயிலாக முற்றுப்புள்ளி விழுந்தது. இடையில் புகுந்து வீண் வார்த்தை உதிர்த்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல் 'வாங்கி'க் கட்டிக் கொண்டார்.

ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடங்களை தி.மு.க. ஒதுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி 'தி.மு.க.வின் செயல் கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது' என அறிக்கை ெவளியிட்டார். அதற்கு தி.மு.க. தரப்பில் பதிலடி தரப்பட இரு கட்சிகளின் இடையில் மோதல் வெடித்தது.பிரச்னை பெரிதான நிலையில் நேற்று காலை புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை அறிவாலயம் சென்றார். தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க. - காங். கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது. இக்கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும். ஸ்டாலின் தமிழக முதல்வராக வருவார். அதற்கு காங். தலைவர்கள் தொண்டர்கள் அயராது பாடுபடுவோம். குடும்பமாக இருந்தாலும் கூட்டணியாக இருந்தாலும் கருத்து வேறுபாடு வரும்; அதை பேசித் தீர்த்துக் கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.அதைத் தொடர்ந்து தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங். தலைவர் ராமசாமி, முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு, எம்.பி. விஷ்ணு பிரசாத் ஆகியோர் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து சமரசம் பேசினர். இரு தரப்பிலும் பொது ெவளியில் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க இந்த சந்திப்பில் முடிவு செய்தனர்.


பின் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி:


ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலை உள்ளது. எங்கள் நிலையை நாங்கள் கூறினோம். அது கூட்டணியை பாதிக்கிற விஷயமல்ல. குடும்பம் என்று இருந்தால் ஊடலும், கூடலும் இருக்க தான் செய்யும். அதில் கோபமும் தாபமும் கிடையாது.ஊடல் வந்த பின் கூடல் வரும்; கூடல் வந்த பின் ஊடல் வரும்; இதில் எந்த தப்பும் கிடையாது. எப்போதும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். ஒரு பிரச்னை வந்தபோது பல கருத்துக்கள் பல இடங்களிலிருந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சொல்லியாகி விட்டது. கருத்து வேறுபாடு வந்தால் ஸ்டாலினும் நானும் பேசி முடிவு செய்து கொள்வோம். இரண்டு கட்சிகளிலும் மற்றவர்கள் கருத்து சொல்ல வேண்டியதில்லை என முடிவாகி உள்ளது.

தி.மு.க.வும், காங்கிரசும் சிறந்த நட்புடைய கட்சிகள். எனவே எங்களுக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்; அது தப்பில்லை. விவாதம் என்பது கருத்து வேறுபாடு அல்ல. சட்டசபை தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி தொடரும்.மதச் சார்பற்ற கூட்டணி என்பது கொள்கை ரீதியானது. நாங்கள் தேசத்தின் உயிர்நாடி. அ.தி.மு.க. கூட்டணி என்பது முற்றிலும் வேறு; அது உறுதியான கூட்டணி இல்லை.எங்கள் கட்சி எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது; என்னுடன் உறுதியாக நிற்கிறது. கட்சி தலைமை எந்த அறிவுறுத்தலும் செய்யவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும்போது இட ஒதுக்கீடு குறித்து பேசுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.இரு தரப்பினரும் சமாதானமானதைத் தொடர்ந்து இரண்டு நாள் மோதல் நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தேவையில்லாமல் இடையில் புகுந்து 'தி.மு.க. - காங். கூட்டணி நீடிக்காது என்று நான் அன்றே சொன்னது இப்போது நடக்கிறது' என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கருத்து தெரிவித்திருந்தார்.அதை கண்டிக்கும் விதமாக ''கமல் ஒருபுறம் தன்னை மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவாளர் என கூறிக் கொள்கிறார். மற்றொருபுறம் ரஜினி பா.ஜ.விற்கு ஆதரவாக இருப்பது தெரிந்தும் அவர் உதவியை நாடுகிறார்.


'தர்பார்' படம் பற்றி பேசினோம் அழகிரி 'காமெடி!'


'இருவரும் என்ன பேசினீர்கள்?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் ''தர்பார் சினிமா குறித்து பேசினோம். படம் நன்றாக இருந்தது என ஸ்டாலின் கூறினார். நீங்கள் பார்த்து விட்டீர்களா என கேட்டார்; இல்லை என்றேன்'' என 'காமெடி' செய்தார்.


காங்., குறித்து பேசாதீர்கள் ஸ்டாலின் கட்டளை'தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி குறித்த கருத்துக்களை பொது ெவளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக அழகிரி அறிக்கை ெவளியிட்டார். சுமுகமாக பேசி தீர்த்திருக்க வேண்டிய மறைமுக தேர்தல் இடப் பங்கீடு அறிக்கையால் பொது வெளிக்கு சென்றது.கடந்த சில நாட்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்து பரிமாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது. தி.மு.க.வின் மனப்பாங்கை உணர்ந்த அழகிரி என்னை நேரில் சந்தித்து பேசினார். எனவே கூட்டணி தொடர்பாக இரு தரப்பும் பொது ெவளியில் விவாதம் நடத்துவதை நான் சிறிதும் விரும்பவில்லை.எனவே விரும்பத்தகாத விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் இனியும் இவ்வாறு ஏற்படக் கூடாது என்பதாலும் கூட்டணி குறித்த கருத்துக்களை இரு கட்சியினரும் பொது ெவளியில் தெரிவிப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பா.ஜ. உறவையும் நாடுகிறாரா என்பதையும் கமல் தெரிவிக்க வேண்டும். அவர் நடக்கும் எனக் கூறியதும் நடந்ததாக கூறுவதும் தவறு; எதுவும் நடக்கவில்லை'' என அழகிரி கேள்வி எழுப்பினார்.

Advertisement
வாசகர் கருத்து (50+ 124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
25-ஜன-202017:54:51 IST Report Abuse
Sundar Now it is certain that DMK will allot less seats than it allotted in last assembly election.Thus DMK will form government in 2021.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஜன-202016:00:40 IST Report Abuse
skv srinivasankrishnaveni ம்ம்ம் இந்தக்கூடதானியால் பலகோடிகள் ரெண்டுபேரும் சேர்த்துண்டாச்சு என்பதுதான் உண்மை எவனும் நேர்மையும் இல்லே ஒழுக்கமும் கிடையாது இதுலே என்னாதுக்குய்யா சந்திப்பு பிரிவு என்று ஷோ காட்டுறீங்க
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
24-ஜன-202010:17:08 IST Report Abuse
Ramalingam Shanmugam ஓட்டே இல்லாதவர்கள் dmk காலில் விழுந்தாக வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X