பொது செய்தி

தமிழ்நாடு

வந்தியத்தேவனாக எம்.ஜி.ஆர்., அனிமேஷனில் அசத்த வருகிறார்

Added : ஜன 18, 2020
Advertisement
 வந்தியத்தேவனாக எம்.ஜி.ஆர்., அனிமேஷனில் அசத்த வருகிறார்

சென்னை:பொன்னியின் செல்வன் நாவல், 'அனிமேஷனில்' ஐந்து பாகமாக உருவாகிறது. இதில், வந்தியத்தேவனாக, எம்.ஜி.ஆர்., இடம்பெற்றுள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலை படமாக, மணிரத்னம் இயக்கி வருகிறார். 'வெப் சீரிஸ்' ஆகவும் படமாக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஐந்து பாகமாக, அனிமேஷன் தொழில்நுட்பத்தில், பொன்னியின் செல்வன் உருவாகிறது. வந்தியத்தேவனாக, எம்.ஜி.ஆர்., பாடிய பாடல், சமீபத்தில் வெளியிடப்பட்டது.இது குறித்து, இயக்குனர் தவச்செல்வன் கூறியதாவது:கல்கியின், பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க வேண்டும் என்பது, எம்.ஜி.ஆர்., கனவு. போஸ்டர் வரை வந்து, அப்படம் கைவிடப்பட்டது.எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், அந்த கனவை, நாங்கள் நனவாக்கதுவங்கியுள்ளோம்.வந்தியத்தேவனாக, எம்.ஜி.ஆர்., இடம் பெறுகிறார்.'சனீஷ்வர் அனிமேஷன்ஸ்' நிறுவனத்தின் முயற்சியால், பொன்னியின் செல்வன் கதை, ஐந்து பாகமாக உருவாக உள்ளது.முதல் பாகத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வரும், மே அல்லது ஜூனில், பல்வேறு இந்திய மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதில், எம்.ஜி.ஆர்., உடன் ஜெயலலிதாவும் நடிக்கிறார். படத்திற்கு மதன்கார்க்கி வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். பொதுவாக, வாழ்க்கை வரலாற்று படம் எடுக்கத்தான், அனுமதி போன்ற விஷயங்களை செய்ய வேண்டும். இது, அனிமேஷன் என்பதால் தேவைப்படாது.இதற்கு முன் பலரும், அனிமேஷனில் எம்.ஜி. ஆரை நடிக்க வைத்துஉள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
'தினமலர்'வெளியிட்ட கார்ட்டூன்
கடந்த, டிச., 13ம் தேதி, நம் நாளிதழின் சென்னை பதிப்பில், 'வந்தியத்தேவனுக்கு யார் சரியான சாய்ஸ்' என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர்., கமல், கார்த்தி ஆகியோரை, கார்ட்டூனாக வரைந்து வெளியிட்டு இருந்தோம்.இந்நிலையில், அனிமேஷன் படத்தில், வந்தியத்தேவனாக, எம்.ஜி.ஆர்., இடம்பெறுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X