சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

பாவம்... பிழைத்துப் போகட்டும் அவர்கள்!

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவில் என்றால் அது வழிபாட்டுக்கு உரிய இடம், அதுவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் அடையாளச் சின்னம் மட்டுமே என்ற கண்ணோட்டத்திலேயே சிலர் பார்க்கின்றனர். அவ்வப்போது கோவில்கள் பற்றியும், கோவில்களில் உள்ள சிலைகள் பற்றியும் அவதுாறாய், 'அர்ச்சனை' செய்கின்றனர். மன நிம்மதிஆனால் அந்தக் காலத்தில் ஆலயங்கள் ஆண்டவனை தொழுவதற்காக மட்டும் அல்ல, மக்களின் நலம் பேணும்
 பாவம்... பிழைத்துப் போகட்டும் அவர்கள்!

கோவில் என்றால் அது வழிபாட்டுக்கு உரிய இடம், அதுவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் அடையாளச் சின்னம் மட்டுமே என்ற கண்ணோட்டத்திலேயே சிலர் பார்க்கின்றனர். அவ்வப்போது கோவில்கள் பற்றியும், கோவில்களில் உள்ள சிலைகள் பற்றியும் அவதுாறாய், 'அர்ச்சனை' செய்கின்றனர்.


மன நிம்மதி


ஆனால் அந்தக் காலத்தில் ஆலயங்கள் ஆண்டவனை தொழுவதற்காக மட்டும் அல்ல, மக்களின் நலம் பேணும் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டன என்பதே உண்மை.மனம், உடல் இரண்டும் சேர்ந்தது தான் மனிதனின் ஆரோக்கியம். இந்த இரண்டில் எது ஒன்று பாதித்தாலும் அது மற்றதை பாதிக்கும். இந்த இரண்டுக்கும் தீர்வாக கோவில்கள் அமைந்திருந்தன. கடவுளை வணங்குவது மனத்துக்கு நிம்மதியைத் தந்தது. கோவில் பிரகாரத்தைச் சுற்றுவது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்தது. இன்றைக்கு நடைபயிற்சிக்கு நேரம் ஒதுக்கி ஆரோக்கியம் பேணுகிறோமே, அதை அப்போது கடவுளின் பெயரால் செய்தோம். அதையும் மீறி உடல் நிலை சரியில்லை என்றால், அப்போதும் கோவில்கள், மக்களைக் காத்தன. ஆம்,பெரும்பாலான கோவில்களில் அன்று மருத்துவமனைகள் இயங்கின என்பதே உண்மை.

சோழ அரசர்கள் காலத்தில் குறிப்பிட்ட சில கோவில்களில், மருத்துவமனைகள் செயல்பட்டன, மக்களின் நலம் காத்தன என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.சோழ மன்னர் ராஜேந்திரனின் நான்கு மகன்களில் கடைசியானவர், வீர ராஜேந்திர சோழன். இவரது ஆட்சிக் காலம், கி.பி., 1063 - -1070 வரை. இவரது ஐந்தாம் ஆண்டு ஆட்சிக் காலத்திய கல்வெட்டு, காஞ்சிபுரம் திருமுக்கூடல் என்னும் ஊரில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் உள்ளது.இக்கோவிலில் அரசரின் பெயரிலேயே, 'வீரசோழன் மருத்துவமனை' இயங்கி உள்ளது. அதற்கு ஆதாரமாய், அக்கோவில் சுவரில், மிக நீண்ட கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது.


நாடி பார்த்து சிகிச்சை


பதினைந்து உள் நோயாளிகள் இந்த கோவில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளனர். உள் நோயாளிகளுக்கு தினமும் உணவு வழங்க அரிசியும் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலை,'ஆதுலர் சாலை வீரசோழனில்வியாதிபட்டுக் கிடப்பார்பதினைவர்க்குப் பேரால் அரிசி நாழியாகஅரிசி குறுணி ஏழுநாழி'என்ற பாடல் தெரிவிக்கிறது.நாடி பார்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை செய்யும் நாவிதர், மருந்து சேகரிப்பவர், பெண் செவிலியர், உதவியாளர்கள், நீர் கொண்டு வருபவர் என பலரும் மருத்துவமனையில் பணிபுரிந்து உள்ளனர். இவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப அரிசி, நெல், காசுகள் ஊதியமாக வழங்கப்பட்டுள்ள செய்தியும் அந்தக் கல்வெட்டில் உள்ளது. நோயாளிகளுக்கு ஓர் ஆண்டிற்குத் தேவையான மருந்துகள், இந்த மருத்துவமனையில் பாதுகாத்து வைத்திருந்த செய்தியும், அந்தக் கல்வெட்டில் பொறிப்பு களாய் நுாற்றாண்டுகளைக் கடந்தும் நிற்கிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின், கி.பி., 1257, கி.பி., 1493 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள், அக்கோவிலில் உள்ளன. 'ஹொய்சாள மன்னர்கள்' காலத்தில் அக்கோவிலில் இயங்கிய மருத்துவமனைப் பற்றிய தகவல்களை, அக்கல்வெட்டுகள் கூறுகின்றன. இன்றைக்கு எல்லா நோய்களுக்கும் தனித்தனி மருத்துவர்கள் இருக்கின்றனர். திருமணம் ஆன புதுமணத் தம்பதியருக்கு உடல் சார்ந்து ஏதும் பிரச்னை என்றால், அதற்கும் மருத்துவர்கள் இருந்திருக்கின்றனர். அதைத் தான் ஒரு சில கோவில்களில், சிறார் கண்களுக்குத் தென்படாத, ஏதோ ஒரு மூலையில் செதுக்கி வைத்திருக்கின்றனர் சிற்பிகள். கோவில்களில் மருத்துவமனை இயங்கியது என்றால், பாலியல் சார்ந்த, ஆண் - பெண் இணைவு சிற்பங்களையும் கோவில்களில் தானே செதுக்க முடியும்?

மருத்துவமனை இயங்கிய காஞ்சி திருமுக்கூடல் கோவிலில், பாம்புகள் பிணைந்த சிற்பங்களும் இருக்கின்றன. பெண்ணொருத்திக்கு, பிரசவம் நடப்பது போன்ற சிற்பமும் உள்ளது. அதே கோவிலில் தான் தாய்க் குரங்கொன்று தன் குட்டியை துாக்கிக் கொஞ்சும் காட்சியும் வடிக்கப்பட்டுள்ளது. புராண, இதிகாச கதைகளும் சிற்பங்களாய் நிற்கின்றன. திருப்புவனை என்ற ஊரில் அமைந்திருக்கும் வரதராஜ பெருமாள் கோயிலில் யானைக்கு மருத்துவம் பார்ப்பது போன்ற சிலையும் உள்ளது.
அக்காலத்தில் கோவில், கோவில் சார்ந்த மடங்களில் மருத்துவமனைகள் , பள்ளி, வேத பாடசாலைகளும் இயங்கின. பாடசாலைகாஞ்சி கோவில்களில், 'கடிகை' என்னும் பாடசாலை இயங்கி உள்ளது. வேறு தேசத்தைச் சேர்ந்த அரசர்கள், இந்தப் பாடசாலையில் வந்து பயின்று, கல்வி கற்று சென்றுள்ளனர். நெல்லை சேமித்து வைக்கும் களஞ்சியங்களும் கோவில்களில் தான் கட்டப்பட்டிருந்தன. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருக்கோவிலூர், மதுரை அழகர் கோவில், பாபநாசம், திருப்பாலைத்துறை போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில், இன்றைக்கும் நெற்களஞ்சிய அமைப்பைப் பார்க்கலாம். மருத்துவமனை, கோவில் ஊழியர்களுக்குப் போக, பஞ்சக் காலத்தில் பொது மக்களின் பசிப்பிணியை கோவில்கள் அகற்றின.

இப்படி மக்களின் சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பன்முகத் தன்மையுடன் விளங்கின, அக்காலக் கோவில்கள்.ஆக, அக்கால கோவில் சிற்பங்கள் பற்றி சேற்றை வாரி இறைப்பதும், திரித்து பேசுவதும், எதிர்மறையான கருத்துகளை கூறுவதும், சிலரின் கொள்கையாகவும், கருத்தாகவும் இருக்கிறது.

'உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்' என்பது திருமூலரின் வாக்கு. நம்மவர்கள் உடலை கோயிலாகவும், ஆன்மாவை கடவுளாகவும் பார்த்தனர். மனம், மருத்துவம் இரண்டின் அடிப்படையில் தான் கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களையும் நம் முன்னோர் வடித்தனர். இது புரியாமல், 'கொக்குக்கு ஒன்றே மதி' என்பது போல செயல்படுவோர், தன் வயிற்றுப் பிழைப்புக்காக இத்தகைய கருத்துக்களை வெளியிடுகின்றனரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 'பாவம், பிழைத்துப் போகட்டும்' என்று விட்டு விடுவோம், கோவில்கள், இத்தகையோருக்கும் பயன்படுகின்றன என்று!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mei - கடற்கரை நகரம்,மயோட்
20-பிப்-202015:18:44 IST Report Abuse
mei தமிழ் வரலாறும் தமிழர் வரலாறும் தெரியாதவர்களுக்கு விளக்கினால் புரியாது ,
Rate this:
Cancel
08-பிப்-202009:40:41 IST Report Abuse
மோகன் அருமையான கட்டுரை.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
19-ஜன-202020:51:19 IST Report Abuse
Darmavan விஷ பிறவிகளை களைந்தால்தான் நல்ல பயிர் வளரும் .இல்லையேல் நல்லவைகளை அழித்துவிடும்.அப்படியே விடக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X