பொது செய்தி

இந்தியா

மாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை

Added : ஜன 19, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
 மாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை

இந்த செய்தியை கேட்க


நாக்பூர்: சமூக கடமைகள் பற்றி மாணவர்கள் சிந்திக்க வேண்டும் என, நாக்பூரில் நடந்த, பல்கலை பட்டமளிப்பு விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறினார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ராஷ்ட்ரசந்த் துகடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின், ௧௦௭வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.


latest tamil news



விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பேசியதாவது:இன்றைக்கு கல்வி பல்கி பெருகி வருகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக சில கல்வி நிறுவனங்கள், வணிக எண்ணம் கொண்டவையாக உள்ளன.பல்கலையில் பட்டம் பெறுவதுடன், கல்வி நிறைவடையவில்லை. இந்த பட்டத்தால், கிடைப்பது எதுவென்ற கேள்வி எழ வேண்டும்.

நாம், ஒரு சமூகமாக வாழ விரும்புகிறோம். அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை, பல்கலை கல்வி வழங்குகிறது. மாணவர்களுக்கான திசையை, அது காட்டுகிறது. அந்த திசையை நோக்கி பயணிக்கும் வகையில், நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.
பல்கலை என்பது, உருவாக்கும் இடம் அல்ல. அது, உத்வேகத்தை அளிக்கும் இடம். மாணவர்களை, நேர்மை உணர்வுடன், சமூக பிரச்னைகளை நோக்கி அழைத்து
செல்லும் இடம். கல்வி வழியாக, ஒழுக்கம் வளர வேண்டும். ஆனால், சில இடங்களில், ஒழுக்கம் மறைந்து ஒருவருக்கொருவர் மீது கசப்புணர்வு உருவாகிறது.

ஒரு மனிதனை, தீவிரமாகவும், விமர்சன ரீதியிலும், சிந்திக்க வைப்பது தான் கல்வி என்பது, மார்ட்டின் லுாதர் கிங்கின் கருத்து. இந்த சமூகம், மாணவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அதை வழங்க முயற்சிக்க வேண்டும். சுதந்திரமாய் இருப்பது போலவே, ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தலும் மிக முக்கியமான விஷயம்.
மாணவர்கள், தங்களை செதுக்கி கொள்வதற்கான ஆயுதங்களை, பல்கலை பட்டங்கள் தருகின்றன. அந்த ஆயுதங்களை, மாணவர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். தேசத்தின் சிறந்த குடிமகனாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு, மாணவர்களுக்கு உள்ளது.
குடியுரிமை என்பது, உரிமை சார்ந்தது மட்டுமல்ல. நம் கடமைகள் சார்ந்தும் இருக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜன-202013:20:21 IST Report Abuse
chandran மாணவர்கள் படிப்பை மட்டுமே சிந்திக்க வேண்டும் அது மட்டுமே அவர்களுடைய சிறந்த எதிர்காலத்தை நிrனைக்கும் படிப்பை முடித்த பிறகு அவர்களுக்கு சமுதாய மற்றும் அரசியலில் சிந்தனைத் தெளிவோடு ஈடுபட்டல் நாடு நலம் பெறும்
Rate this:
Share this comment
Cancel
Abi Abi - Chennai,இந்தியா
19-ஜன-202013:14:28 IST Report Abuse
Abi Abi அரசியல் வாதிகள் தங்கள் சமுதாய பொறுப்புகளை உணர்ந்து நடக்கவேண்டும். தேவை இல்லாமல் தங்கள் போராட்டங்களுக்காக மாணவர்களை உசுப்பி விடக்கூடாது. மாணவர்கள் படிப்பு முடியும் வரை அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. அரசியல் வியாதிகள் தங்களின் போராட்டங்களுக்கு மாணவர்களை பகடைக்காய் ஆக்குகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
19-ஜன-202012:57:13 IST Report Abuse
bal இவங்க மட்டும் வாய்தா மேலே வாய்தா கொடுப்பாங்க...எல்லா குற்றவாளிகளுக்கு ஜாமின் மேலே ஜாமின் கொடுப்பாங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X