பாக்.,கில் மேலும் ஒரு சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (41)
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்து மதத்தை சேர்ந்த மெஹாக் என்ற இந்து சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.







பாகிஸ்தானில் இந்து , சீக்கிய பெண்களை கடத்தி கட்டாயமாக மதமாற்றம் செய்து முஸ்லீம் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். மேலும் சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது, சிறுபான்மையினா் கொலை செய்யப்படுவது ஆகியவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுமிகள் கடத்தப்பட்டு இஸ்லாமிற்கு மாற நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஜன., 14 ல் பாக்.,கின் சிந்து மாகாணத்தில் உள்ள உமர் கிராமத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டனர்.





இந்நிலையில் கடந்த ஜன.,15 ல் சிந்துவின் யாக்கோபாபாத் மாவட்டத்தில் உள்ள மெஹாக் (14) என்ற இந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த கடத்தல் நிகழ்வுகள் சிறுபான்மையினரின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக இம்ரான் பேசியதாவது: பாகிஸ்தானில் நாங்கள் கட்டாய இஸ்லாம் மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க எங்கள் அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள், அவர்களின் மத கட்டமைப்புகள் மீட்டெடுக்கப்படும். சிந்தில் மக்கள் பலவந்தமாக மாற்றப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதைச் செய்கிறவர்களுக்கு இஸ்லாம் பற்றி தெரியாது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பேப்பர்காரன் - Trichy,இந்தியா
20-ஜன-202007:07:48 IST Report Abuse
பேப்பர்காரன் இதுதான் ...களின் குணமே மோடி நியூஸ் கு வந்து கருத்து போடுற இஸ்லாமிய குரூப், அவர்கள் மத ரீதியான தீவிரவாதிகளை, மத மாற்ற நிகழ்வுகளை எதிர்த்து ஒரு கருத்தும் போட மாட்டார்கள். எவ்வளவு கயமை தனம் இது. சுய சிந்தனை அற்ற மத வெறி பிடித்த மூளை சலவை செய்யப்பட்ட ஆட்டு மந்தை கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
19-ஜன-202018:51:53 IST Report Abuse
sridhar சூசைக்கு என்ன கவலை ? மனதளவில் அவர் ஒரு முஸ்லீம் தான்.
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
20-ஜன-202001:41:54 IST Report Abuse
Aarkayஅவர் ஒரு கிறிஸ்தவரும் கூட...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
19-ஜன-202017:10:10 IST Report Abuse
தமிழ்வேள் இது மட்டும்தான் நடக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X