சரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு ; பியுஷ் கோயல்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (2)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : சரக்கு ரயிலில், 'புக்' செய்த பொருட்கள் தாமதமாக வந்தால், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், சூசகமாக தெரிவித்துள்ளார்.






டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பியுஷ் கோயல் கூறியதாவது:ரயில்வே துறையில் பயணியருக்கு அதிக சலுகைகள், வசதிகள் ஏற்படுத்தும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. டில்லி - லக்னோ, மும்பை - ஆமதாபாத் இடையே இயக்கப்படும் தேஜாஸ் ரயில், ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தால், பயணியருக்கு, 100 ரூபாய் இழப்பீடு அளிக்கப்படுகிறது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தால், 250 ரூபாய் இழப்பீடு அளிக்கப்படுகிறது.

இதேபோல், சரக்கு ரயில் போக்குவரத்திலும், திட்டமிட்டநேரத்தில், வாடிக்கையாளர்களிடம் பொருட்களை ஒப்படைக்கும் விதமான திட்டங்கள் அறிவிக்கப்படும். சரக்கு ரயில் போக்கு வரத்தில், நன்றாக வேலை செய்தால் ஊக்கத் தொகை அளிக்கவும், தாமதமான பணிக்கு அபராதம் விதிக்கும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்படும்.






இது தொடர்பாக, ரயில்வே வாரிய கூட்டத்தில் பேசி முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜன-202014:37:13 IST Report Abuse
ஆப்பு சரக்கு கட்டணத்தை அநியாயத்துக்கு ஏத்தப் போறோம் என்று பொருள் காண்க....
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
19-ஜன-202006:44:39 IST Report Abuse
Mannai Radha Krishnan அப்படி குட்ஸ் வண்டி லேட்டுக்கு இழப்பீடு கொடுத்தால்,.........ரெயிவேயே திவாலாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X