முஷாரப் சரணடைந்தால் அப்பீல் ஏற்கப்படும்; பாக்., கோர்ட்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (4)
Advertisement

இந்த செய்தியை கேட்க

இஸ்லாமாபாத் ; 'தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கவேண்டும் என்றால் பர்வேஸ் முஷாரப் முதலில் சரணடையவேண்டும்' என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப்74 நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். பலர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து 2013ம் ஆண்டில் பிரதமராயிருந்த நவாஸ் ஷெரிப் அரசு முஷாரப் மீது தேச துரோக வழக்கு தொடர்ந்தது.அந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பர்வேஸ் முஷாரபுக்கு தூக்கு தண்டனைவிதித்து அதிரடியாக தீர்ப்பளித்தது.இதையடுத்து முஷாரப் லாகூர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்'சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது அரசியலமைப்பிற்கு எதிரானது' என தீர்ப்பளித்தது. எனினும் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அப்படியேதானிருக்கிறது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து 16ம் தேதி பர்வேஸ் முஷாரப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 90 பக்கங்கள் கொண்ட அந்த மேல்முறையீட்டு மனுவில் 'சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தார். எனினும் அந்த மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சட்டப்படி மேல்முறையீடு செய்யவேண்டும் என்றால் அதற்கு முன் குற்றவாளி சரணடையவேண்டும் என கூறியது.'அடுத்த ஒரு மாதத்திற்குள் பர்வேஸ் முஷாரப் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அப்படி சரணடையாவிட்டால் மேல்முறையீடு செய்யும் உரிமையை அவர் இழக்க நேரிடும்' என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-ஜன-202013:44:25 IST Report Abuse
Sanny நம்பாதே, நம்பாதே நீ போனால் போட்டுத்தள்ளிவிடுவாங்க உங்க ஆட்கள்.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-ஜன-202008:16:04 IST Report Abuse
S.Baliah Seer அதெல்லாம் சரிதான்.சரணடைந்த மறுநாளே நீங்கள் ஜெனரல் முஷாரப்பை தூக்கில் போட மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? பாக்கில் இதுவரை அரசியல் தலைவர்களுக்கு நேர்ந்தது எல்லாம் உலகம் அறிந்ததுதான்.சதிவலை பின்னப்பட்டிருக்கிறது. ஜெனரல் முஷாரப் சரணடையாதீர்...உஷார்
Rate this:
Share this comment
20-ஜன-202000:20:54 IST Report Abuse
Vittlanand RaoAppeal yerkkappdum yendru thaan sollappattirukirathu. Theerpaai raththu seivathaaka alla...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X