'குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்'; கேரள கவர்னர்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (28)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜெய்பூர் : ''குடியுரிமை திருத்த சட்டம், மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதால், அதை, மாநில அரசுகள் அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை,'' என, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.






கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம் மாநில அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, இச்சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது.இது குறித்து, ஜெய்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் ஆரிப் முகமது கான் பேசியதாவது:கேரள அரசு, என்னிடம் தெரிவிக்காமல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது, குறித்து, அறிக்கை தருமாறு, கேரள அரசை கேட்க உள்ளேன். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, ஒவ்வொருவரும், பலவிதமாக வாதம் புரியலாம். இச்சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் உரிமை உள்ளது. ஆனால், அது சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கக்கூடாது.





குடியுரிமை அளிப்பது, மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அது, மாநில அரசுகளுக்கு பொருந்தாது. மாநில அரசுகள், அரசியல் சாசனம், 254ம் பிரிவின் கீழ் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை.மதம் என்பதை, வெறும் சடங்குகள், சம்பிரதாயங்களை மட்டும் வரையறுத்து விட முடியாது. தன் அறிவாற்றலை தானே வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் அனைவரையும் சமமாக பாவிப்பவரே, பிராமணர் ஆவார். பிறப்பில் யாரும் யாருக்கும் குறைந்தவர் இல்லை. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது.





'இந்தியா, அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கும் நாடு' என, 10ம் நுாற்றாண்டிலேயே, அரபு உலகம் அங்கீகரித்துள்ளது. இந்திய நாகரிகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதர நாகரிகங்கள் தொடர்ந்து வளராமல் அழிந்து விட்டன. இவ்வாறு, அவர் கூறினார். இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய, பஞ்சாப் அரசு, அடுத்து, கேரளாவை பின்பற்றி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஜன-202021:30:56 IST Report Abuse
Sampath Kumar சமமாக பாவிப்பரே பிராமணர் ஆவர்???
Rate this:
Share this comment
Cancel
ஹிந்துஸ்தானி, ஹிந்துஸ்தான் CAA -வுக்கு எதிராக விஷமக் கருத்துகளை பரப்பிவரும் திருமாவளவனைப் பற்றி பரவி வரும் புதிய வீடியோ. https://youtu.be/qh5hiRLqcNs
Rate this:
Share this comment
Cancel
Fardhikan - Rajakambeeram,இந்தியா
19-ஜன-202014:45:59 IST Report Abuse
Fardhikan நீ வாங்குற சம்பளத்துக்கு ஏதாவது பேசித்தான் ஆகணும் பேசு பேசு மொத்தத்துல இந்திய நாசமாக்கும் அதனை உன் ஆசை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X