பாதுகாப்பு வாபஸ் ஏன்?

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (40)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும், மத்திய அரசு அளித்து வந்த துணை ராணுவ பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.






மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு, அரசியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படுகின்றன. சமீபத்தில், டில்லி வந்திருந்த தமிழக முதல்வர் இ.பி.எஸ்., உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், தமிழக அரசியல் குறித்து, பல விஷயங்கள் அலசப்பட்டன. அப்போது, இந்த இரு தலைவர்களுக்கும் தரப்பட்டு வந்த துணை ராணுவத்தினர் பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டதாம். இதன் பிறகு தான் பன்னீர் செல்வத்துக்கும், ஸ்டாலினுக்குமான பாதுகாப்பு வாபஸ் ஆனதாம்.அ.தி.மு.க.,விற்குள் இருக்கும் கோஷ்டிப் பூசலை, பா.ஜ., சரியாக பயன்படுத்திக் கொள்கிறது.






'பன்னீர்செல்வத்துக்கு மட்டும் வாபஸ் பெற்றால் சரியாக இருக்காது; அதனால், ஸ்டாலினுக்கும் சேர்த்து உத்தரவிடப்பட்டது' என, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 'அப்படி எல்லாம் கிடையாது. சோனியா, ராகுல் உட்பட பல தலைவர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 'யார் யாருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், இப்போது தரப்பட்டு வருவதை யாருக்கு குறைக்க வேண்டும் என்பதை, உள்துறை அமைச்சக கமிட்டி தான் முடிவு செய்யும்.தமிழக விவகாரத்திலும், இந்த கமிட்டி தான் முடிவு செய்துள்ளது' என, மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.எது எப்படியோ, தமிழக அரசியல்வாதிகள் மத்தியில், ஒரு சந்தேகத்தை விதைத்துவிட்டது மத்திய அரசின் நடவடிக்கை.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஜன-202019:03:04 IST Report Abuse
Sampath Kumar நாட்டுக்கு ரொம்ப தேவை இந்த செய்தி ? அட போங்க ???
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
19-ஜன-202017:48:15 IST Report Abuse
kumzi சூசைக்கு தா கல்லெறி படை ஓசிகோட்டர் படை இருக்கே எதுக்கு கொமோண்டோ படை
Rate this:
Share this comment
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
19-ஜன-202016:46:11 IST Report Abuse
Raja பொதுவாக மூர்க்க மார்க்கத்தினரிடமிருந்துதான் ஆபத்து வரும். ஆனால் சுடலைக்கு மூர்க்க மார்க்கத்தினரின் பாதுகாப்பு உள்ளதால் அந்த மூர்க்கபடையே கருப்புபூனை பாதுகாப்பு கொடுக்கும். தமிழ்நாடு போலீஸ் எதுக்கு இருக்கு. அவங்க கொடுக்கற பாதுகாப்பு போதாதா? ஓபிஎஸ் இபிஎஸ் போன்றவர்களுக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X