பொது செய்தி

இந்தியா

புதிய பார்லியில் 1,350 எம்.பி.,க்கள் அமரலாம்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 1,350 எம்.பி.,க்கள் அமரும் வகையில் புதிய பார்லி கட்டடம் கட்டப்பட உள்ளது.latest tamil newsடெல்லியில் பார்லிமெண்ட் வளாகம் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய பார்லிமெண்ட் கட்டடம் முக்கோண வடிவில் அமைக்கப்பட உள்ளது. ”முக்கோண வடிவம் கட்டட அமைப்பு புனித தன்மையை பிரதிபலிக்கிறது. அதனால் தான் நம் நாட்டின் பார்லிமெண்ட் கட்டடமும் புனித தன்மையுடன் அமைக்கப்பட வேண்டும் “ என்று பார்லிமெண்ட் வளாக புணரமைப்பு திட்ட வடிவமைப்பாளர் பீமால் படேல் கூறினார்.

இதன் படி அகலமான இரு பேர் அமரக்கூடிய இருக்கைகள் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒதுக்கப்படும். ஒரே இருக்கையில் 3 பேர் வரை அமர முடியும். வளாகத்தில் நம் தேசிய கொடியை குறிப்பிடும் வகையில் மூன்று பிரம்மாண்டமான தூண்களும் அமைக்கப்படும்.

புதிய பார்லி வளாகம் வரும் 2022ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட வரையறுக்கப்பட்டுள்ளது. இறுதி திட்டமும் டெண்டர் அறிவிப்பும் இந்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனரமைப்பு திட்டத்தின்படி தற்போதுள்ள வடக்கு மற்றும் தெற்கு பிளாக் கட்டடங்கள் அருங்காட்சியகங்களாக மாற்றி அமைக்கப்படும். மேலும் பிரதமர் இல்லம் தெற்கு வளாகத்திற்கு பின்புறமாகவும், துணை ஜனாதிபதி இல்லம் வடக்கு வளாகத்திற்கு பின்புறமும் மாற்றப்படும்.


latest tamil news
பார்லி வளாக புணரமைப்பு திட்ட வடிவமைப்பாளர் பீமால் படேல் கூறுகையில், 'கியூபா, சிங்கப்பூர், எகிப்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள பார்லி வளாக கட்டங்களுக்கு இணையாக நம் பார்லியும் மாற்றி அமைக்கப்படும். உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையிலான கூட்டங்கள் நடக்கும் போது இடநெருக்கடி ஏற்படுவதாக புகார் வந்தது. தற்போது அமைக்கப்படும் இருக்கைகளில் உறுப்பினர்கள் ஐபேட் மற்றும் பைல்களை வசதியாக டேபிளில் வைத்துக் கொள்ளமுடியும். பார்லி கட்டடம் வடிவில் அமைக்கப்பட இருப்பதற்கான காரணம், முக்கோண வடிவம் கட்டட அமைப்பில் புனித தன்மையை பிரதிபலிக்கிறது. நம் நாட்டின் பார்லி கட்டடமும் புனித தன்மையுடன் அமைக்கப்பட வேண்டும். கூட்டத்தில் சத்தம் ஏற்படும் போது எதிரொலிக்காத வகையிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ' இவ்வாறு அவர் கூறினார்.

2019, ஆகஸ்டில் நடந்த பார்லி கூட்டத்தில் லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர், பார்லி கட்டட வளாகம் 92 ஆண்டுகள் பழையதாக உள்ளது. அதை புதிதாக புணரமைக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டார். தற்போது அமைக்கப்படும் பார்லி கட்டடத்தின் வடிவம் இந்தியாவின் தொன்மையான சவ்ரத் யோகினி கோயிலை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜன-202001:15:33 IST Report Abuse
தமிழ்வேல் கூட்டணி ரெடியாயிட்டுதோ.... மேல் தளத்தில் ரெண்டு உதய சூரியன் இருக்கே..
Rate this:
Cancel
mutharasu - puliangudi,tirunelveli,இந்தியா
19-ஜன-202022:39:54 IST Report Abuse
mutharasu நம் நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப,மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
19-ஜன-202019:44:48 IST Report Abuse
Krishna Said Bigger Parliament Can be Constructed at Half Cost (atleast 10% will be Commissions Remaining Extravaganas- All for VVV High Wasteful Expenditures).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X