கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (69)
Advertisement

இந்த செய்தியை கேட்க

டெஹ்ரான்: கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ஈரானின் பெர்சிய மொழி செய்தி ஏஜென்சி ஹிரானா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது;






ஈரானைச் சேர்ந்த 21 வயது பெண் பாத்திமா முகமதி இவர் சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் இதனால் இவர் ஈரானில் பிரபலமானார். அவரை ஈரான் போலீசார் கைது செய்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
உக்ரைன் பயணியர் விமானத்தை ஈரான் ஏவுகணை சுட்டு வீழ்த்திய பிறகு ஈரான் அரசை எதிர்த்து ஆசாதி சதுக்கத்தில் போராட்டம் நடந்தது. அந்த இடத்தில்தான் பாத்திமா கைது செய்யப்பட்டார். மத மாற்றத்திற்கு பிறகு பாத்திமா தனது பெயரை மேரி என்று மாற்றிக்கொண்டார்.


பெரிய அதிசயம்


கிறிஸ்தவ ஆதரவு நடவடிக்கையில் ஈடுபட்ட மேரி (பாத்திமா ) ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்தவர். ஈரானில் கிறிஸ்தவ ஊழியம் செய்வது என்பது மிகவும் அரிதான செயல் . அப்படிப்பட்ட ஒரு பணியை பாத்திமா செய்து வந்ததே பெரிய அதிசயம். இது போன்ற ஒருவர் ஈரானில் இருந்தது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் பாத்திமா ஆறுமாதங்களுக்கு சிறை வைக்கப்பட்டார். அதாவது இஸ்லாம் அல்லாத மதத்திற்காக பிரச்சாரம் செய்வதே மிகப்பெரிய குற்றமாக ஈரானில் கருதப்படுகிறது என்று அர்த்தம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாத்திமா என்ற மேரி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அன்று பாத்திமா நிறைய டுவீட்டுகளை பதிவிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறியுள்ளதாவது;
" ஈரானில் அரசு என்ன சொல்கிறதோ அந்த செய்திகள் மட்டுமே செய்தி ஏஜென்சிகள் மூலம் வருகின்றன."
" ஈரான் மக்கள் அரசின் மென்மையான ஆதிக்கத்தை உணர்கிறார்கள். அரசின் மென்மையான கருத்து திணிப்பை விட கண்ணீர் புகை குண்டு தடியடி ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கிறது."
" ஈரான் அரசு பொய்களையே திரும்பத் திரும்ப சொல்லி நம்ப வைக்கிறது." இவ்வாறு கூறியுள்ளார்.






பாத்திமா யார் ?


பாத்திமா கிறிஸ்தவ மதத்தில் அதிக பற்றுள்ளவர் மதத் வளர்ச்சிக்காக பாடுபட்டார். இதனாலேயே ஏற்கனவே அவர் ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார்.
சென்ற ஆண்டு இஸ்லாம் பெண்கள் அணியும் தலை ஸ்கார்ப் அணியவில்லை என்று அரசால் குற்றம் சாட்டப்பட்டார்.
பின்னர் அந்தக் குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் பாத்திமா அதிகமான ஈடுபாடு கொண்டவர். அவர் படித்த பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும் அவருடன் படித்த 10 பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அவருடன் இருந்த 61 வயது பெண் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் அவரும் சிறையிலடைக்கப்பட்டார் என்றும் பாத்திமா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
22-ஜன-202005:55:20 IST Report Abuse
chenar இந்து மத வேதத்தில் சாதி இல்லை ??? நம்பிட்டோம் உங்களுக்கு சாதி இல்லை ?
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
20-ஜன-202005:29:52 IST Report Abuse
kumzi மூர்க்க கூட்டத்தில் பிறக்கிற ஒவ்வாரு பெண் குழந்தையும் பாவப்பட்டதுகள் மூன்று வயதில் போடும் முக்காடு சாகும் வரை தொடரும் அதற்காக தான் சில இஸ்லாமிய பெண்கள் மதமாறுகிறார்கள் மூர்க்கனுங்களின் கொலை பயமுறுத்தலால் தான் இன்னும் அடிமைகளாக வாழ்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
20-ஜன-202005:14:11 IST Report Abuse
Anandan இஸ்லாத்தில் இருந்து வேறு மதம் செல்பவர்களும் நாத்திகர்கள் ஆவதும் நடக்கிறது ஆனால் அப்படி இஸ்லாமியர்கள் நாட்டில் நடத்தால் உயிரை விடவேண்டியதுதான். அப்புறம் எப்படி இது அமைதி மதம் என்று சொல்லமுடியும்? விளங்கிக்கொள்ளவே முடிவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X