சி.ஏ.ஏ.,வை எதிர்க்கும் மாநில அரசுக்கு பிரச்னைகள் வரும்; கபில்சிபல்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (39)
Advertisement
caa, citizenshipamendmentact, kapilsibal, congress, cong, kabil, sibal, salmankurshid, khurshid, parliment, supremecourt, sc,kerala,  கேரளா, குடியுரிமைசட்டம், சிஏஏ, கபில்சிபல், சிபல், சல்மான்குர்ஷித், உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட், குர்ஷித், காங்கிரஸ், காங்., மத்தியஅமைச்சர்

இந்த செய்தியை கேட்க

கோழிக்கோடு: பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மாநி அரசுக்கு பிரச்னைகள் வரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை சட்டத்தை ஏற்க முடியாது என மாநில அரசுகள் கூற முடியாது. அப்படி கூறுவது சாத்தியமில்லை. அப்படி சொல்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயலாகும்.
நீங்கள் ஒரு சட்டத்தை எதிர்த்து, மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். அந்த சட்டத்தை கைவிடும்படி மத்திய அரசை நீங்கள் கேட்கலாம். ஆனால், அந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சொல்வது மாநில அரசுக்கு பெரும் பிரச்னைகளை உருவாக்கும். மாநில அரசுக்கு பல கஷ்டங்களை கொண்டு வந்து சேர்க்கும். பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை பின்பற்ற மாட்டேன் என ஒரு மாநில அரசு கூறுவது அரசியலமைப்பு சட்டத்தின்படி மிகவும் கடினமாகும்.

குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் கூறி வரும் நிலையில், அப்படி செய்ய முடியாது என, முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்துள்ளனர். இருவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கூட.

குடியுரிமை சட்ட விவகாரத்தை பொறுத்தவரை நாட்டு மக்களுக்கும், ஆட்சியாளருக்கும் இடையே நடக்கும் போராட்டமாகும். இந்த போராட்டத்தை அரசியல் சார்பின்றி மாணவர்கள், ஏழைகள், நடுத்தர குடும்பத்தினர் முன்னெடுத்து செல்கிறார்கள். அதற்காக நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் எதிர்காலம் பற்றிய கவலையுடன் அரசுக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இதை உள்நாட்டு மக்களும், வெளிநாட்டினரும் கவனித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் வளர்ச்சியை விரும்புகின்றனர். ஆனால், பிரதமர் மோடி சாதித்தது என்னவென கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





கபில் சிபலின் கருத்து தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், குடியுரிமை சட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாவிட்டால் இது அரசியல் சட்ட புத்தகத்தில் இருக்கும். இதனை அனைவரும் மதித்து தான் ஆக வேண்டும். இல்லையென்றால், பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த சட்டம் குறித்து, மத்திய அரசுடன் பல்வேறு மாநில அரசுகள் இடையே உள்ள பிரச்னை கவலைக்குரியது. இதனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-ஜன-202006:49:57 IST Report Abuse
elakkumanan ஒன்னியும் பண்ண முடியாது என்ற உண்மையை சொன்ன ஸிரோ லாஸ்குநன்றி .. சிறுபான்மை இன காவல் தெய்வங்கள் (ஐயோ......பகுத்தறிவு சொறி கோச்சுக்கும்....)காவல் கருமங்கள் என்ன செய்யுமோ தெர்லயே .. சிறுபான்மைக்கு பிரச்சினைனு சொல்லி ஊரை ஏமாத்தி, திருட்டு மீடியா கூட்டத்தை வச்சு போராட்டத்தை ஆரமிச்சாச்சு.. ஆனால், சிறுபான்மைக்கு ஒரு பிரச்சினையும் இல்லைனு தெரிஞ்சா நம்ம எண்ணத்தை சொல்லி ஒட்டு திருடுவது. இனிமேல், நமது பொழப்பு கோவிந்தா வா? ஏமாத்தாம, பொய் சொல்லாம, திருடாம, நமக்கு எப்புடி பொழைக்கிறதுன்னு சொல்லித்தராலேயே? அய்யகோ.. என் வாரிசுக்கு பணமும் பதவியும் கிடைக்காதா? இது ஒருதுரோகம் இல்லையா? இதுக்கு மோடி காரணம் இல்லையா? இதைத்தானே, sirupaanmai inathukku சோதனை னு சொன்னோம்....சிறுபாண்மை காவல் (நன்றியுள்ள விலங்கு) கூட்டத்துக்கு சோதனை என்பது சிறுபான்மைக்கான சோதனையில்லயா? இதயெல்லாம் கோர்ட்டில் சொல்லுவோம்.. அழுது புரண்டு பாப்போம் ...ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அல்லது நடத்தி ஏதாவது ஆதாரம் தேத்தி பாப்போம் ... கடவுள்.. அட சே.. சொரியார் தான் காபியாதானும்.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
19-ஜன-202019:23:55 IST Report Abuse
GMM குடியுரிமை திருத்தம் பாராளுமன்ற சட்டம். பின்பற்ற மாட்டோம் என கேரளா(பஞ்சாப்) மாநிலம் கூறுவது/ வழக்கு தாக்கல் செய்தது குற்றம்? உச்ச நீதிமன்றம் சட்டம் காக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்களுக்கும், ஆட்சியாளருக்கும் இடையே எந்த போராட்டமும் இல்லை. சில எதிர்க்கட்சிகள், நாட்டு நல சட்டமாக இருந்தாலும், ஆளும் பிஜேபிக்கு எதிராக போராட வேண்டும் என்ற நிலையை கொண்டுள்ளன. காரணம் அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கை. அரசும் வளர்ச்சியை நோக்கி திட்டம் போட்டு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-ஜன-202019:16:20 IST Report Abuse
தாண்டவக்கோன் காங்கிரசின் உண்மையான நோக்கம் சி ஏ ஏ வேண்டும் என்பதுதான். அரசியல் காரணங்களுக்காக சும்மா சீன போடுறாய்ங்க அரபீசும் அதை நம்பி கான்கிராஸ் பின்னாடி போறானுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X