நக்சல்களுடன் தொடர்பு: உஸ்மானியா பல்கலை., பேராசிரியர் கைது

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (25)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: தெலுங்கானாவில், பிரசித்தி பெற்ற உஸ்மானிய பல்கலை பேராசிரியர் ஒருவர், நக்சல்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.







இது குறித்து சிட்டிபேட் போலீஸ் கமிஷனர் ஜோயல் டேவிஸ் கூறியதாவது; உஸ்மானியா பல்கலையில் தெலுங்குமொழிப்பிரிவு பணியாற்றுபவர், பேராசிரியர் சிந்தகிண்டி காசிம். இவரது நடவடிக்கைகள் போலீசாருக்கு சந்தேகங்களை கிளப்பியது.






இதனை தொடர்ந்து கோர்ட் வாரண்ட் பெற்று, பல்கலை., வளாகத்தில் உள்ள இவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது . லேப்டாப், கம்ப்யூட்டர், பென்டிரைவ், மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் , தடை செய்யப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர், மாவோயிஸ்ட் அமைப்பு மாநில குழு உறுப்பினர் ஹரி பூஷனுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. இவ்வாறு கமிஷனர் கூறினார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து தெலுங்கானாவில் இது வரை நக்சல் தொடர்பாளர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
20-ஜன-202013:35:04 IST Report Abuse
prakashc நாடு முழுக்க சுத்தம் செய்யும் பிஜேபி உண்மையில் தேச பற்றுள்ள கட்சி . வாழ்க பிஜேபி எனக்கும் இந்த கட்சி மீது பற்று வருகிறது .
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
20-ஜன-202010:03:11 IST Report Abuse
pattikkaattaan நக்சல்கள் வன்முறையை கையில் எடுத்து இதுவரை என்ன சாதித்துள்ளார்கள் என்று தெரியவில்லை .. சுதந்திரப்போராட்டத்தின்போது வெள்ளையனுக்கு எதிராக சிலர் தீவிரவாதத்தை கையில் எடுத்தார்கள் .. அதை இன்று நாம் வீரம் என்று போற்றினாலும் , மக்களாட்சி வந்தபிறகு நம்மை ஆளும் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம்மிடமே உள்ளது .. ஒரு ஆட்சி சரியில்லை என்றால் இன்னொருவரை தேர்ந்தெடுக்கிறோம் .. ஆனால் சரியானவரை தேர்ந்தெடுக்கிறோமா என்பதே கேள்விக்குறி .. இனிமேல் ஆட்சியாளர்கள் எவ்வளவு வரி போட்டாலும் , எவ்வளவு சட்டவிரோத கொள்ளையில் ஈடுபட்டாலும் நாம் அதை எதிர்த்து போராடாமல் , அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் .. ஒன்று மட்டும் மட்டும் நிச்சயம், ஆட்சி யாரிடமும் நிலையாக இருப்பதில்லை ..
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
20-ஜன-202007:00:04 IST Report Abuse
sridhar அதுங்களுக்கு மட்டும் ஏன் புத்தி இப்படி வேலை செய்யுது. நம்ம நாட்டு சோத்தை தின்கிறாங்க. நமக்கே துரோகம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X