அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை: நிர்மலா சீதாராமன்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (29)
Advertisement
CAA, citizenshipamendmentact, Financeminister, Nirmala, Nirmalasitharaman, FinanceministerNirmala, FinanceMinisterNirmalasitharaman, FMNirmalasitharaman, MinisterNirmala, parliment, oppositions, Srilanka, refugges, குடியுரிமைதிருத்தசட்டம்,  குடியுரிமைசட்டம்,சிஏஏ, நிதிஅமைச்சர், நிதியமைச்சர், நிதிஅமைச்சர்நிர்மலா, நிதிஅமைச்சர்நிர்மலாசீதாராமன், நிதியமைச்சர்நிர்மலா, நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன், இலங்கை அகதிகள், அகதிகள், பார்லிமென்ட், எதிர்க்கட்சிகள்,

இந்த செய்தியை கேட்க

சென்னை : குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பும் ஏற்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டம் தொடர்பாக சென்னை திநகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், அசாமில் நடக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, நீதிமன்ற உத்தரவால் நடக்கிறது. அந்த நடைமுறை பிற மாநிலங்களுக்கு பொருந்தாது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம். யாருடைய அந்தஸ்தையும் பறிக்கும் சட்டம் அல்ல. பழைய நடைமுறைகளில் எந்த பிரச்னையும் இல்லை. யாருடைய குடியுரிமை பறிக்கப்படும் எனக்கூறுகிறார்களோ அவர்களிடம் விளக்கம் தர தயாராக இருக்கிறோம். பார்லிமென்டில் விவாதம் நடந்த போது, எதிர்க்கட்சியினரின் அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளிக்கப்பட்டது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. முறையாக பதிவு செய்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. குடியுரிமை சட்டத்தை பற்றி பேசுவோர் அகதிகள் முகாமை பற்றி பேசவில்லை. மனித உரிமையை பற்றி பேசாதவர்கள்தான் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்களின் உரிமைகளை பற்றி யாரும் பேசுவது இல்லை. முகாமில் வசிப்போருக்கும் குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வரவில்லை. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், 1995ல் இருந்து நடைமுறையில் இருக்கிறது.





சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது செல்லாது. அவர்கள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. அவர்கள் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தால் எந்த பாதிப்பும் இல்லை. குடியுரிமை சட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக பேசி மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்க வேண்டாம், பொறுப்புடன் பேச வேண்டும்.6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள், 172 வங்கதேசத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.1964- 2008 வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-ஜன-202022:36:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பணவீக்கம் 7.5% அதை பத்தி பேசுங்க அம்மிணி..
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
20-ஜன-202006:55:53 IST Report Abuse
Anandanபொய் நேருவை கேளுங்க எல்லாத்துக்கும் அவரே காரணம்....
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஜன-202021:24:58 IST Report Abuse
Sampath Kumar ஆமாங்க யாருக்கும் இல்லை ?? எதுவும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஜன-202021:01:35 IST Report Abuse
Bhaskaran நாட்டின் பொருளாதாரத்தைப்பற்றிப்பேசமாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளாரோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X