பொது செய்தி

இந்தியா

பட்ஜெட்டில் மது, சிகரெட்டிற்கு வருகிறது கட்டுப்பாடு

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (10)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : வெளிநாடு சென்று திரும்புவோர் மது பாட்டில்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்களை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கான அளவுகளில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரும்படி மத்திய நிதியமைச்சகத்திற்கு, வர்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.





2020-21 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்.,1 ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பல்வேறு தரப்பிலும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகிறது. வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்த, ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்கு பல்வேறு வழிகளை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் பொருட்களின் அளவுகளில் சில மாற்றங்களை கொண்டு வர வர்த்தக அமைச்சகம், நிதியமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கி உள்ளது.





இதில், இந்திய விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள வரி விலக்கு மையங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாடு சென்று திரும்பும் பயணிகள் இனி ஒரு லிட்டர் மதுபான பாட்டில் தான் கொண்டு வர முடியும். இதுவரை, இவர்கள் 2 லி., பாட்டில்களை கொண்டு வரலாம். இதே போன்று தற்போது நடைமுறையில் இருக்கும், 10 பாக்கெட்கள் வரையிலான சிகரெட்கள் கொண்டு வரலாம் என்ற முறையிலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பல வெளிநாடுகளில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஒரு லிட்டர் வரையிலான மதுவை மட்டுமே கொண்டு வர அனுமதி உள்ளது. இந்த நடைமுறையை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும். விமான நிலைய வரி சலுவை மையங்களில் ரூ.50,000 வரையிலான பொருட்களுக்கு இறக்குமதி விதிக்கப்படுவதில்லை. இந்த முறையில் சில மாற்றங்கள் கொண்டு வந்து பேப்பர், காலணி, ரப்பர் பொருட்கள் மற்றும் பொம்மைகளுக்கான சுங்கவரியை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் உற்பத்தி துறையை ஊக்குவிக்க முடியும். மரச்சாமான்கள், ரசாயனங்கள், ரப்பர், பேப்பர் பலகைகள் உள்ளிட்ட300 பொருட்கள் மீதான சுங்க மற்றும் இறக்குமதி வரியை முறைப்படுத்த வேண்டும் எனவும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜன-202022:40:49 IST Report Abuse
Ranjith Rajan மக்கள அடிச்சு புடுங்காம பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு திட்டம் கூட இல்லையா உங்க கிட்ட. இறக்குமதியை இறுக்குவதற்கு பதில் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம் போடுங்கள். ஏற்றுமதி தொழில்களுக்கு அதிக கடன் கொடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
19-ஜன-202022:38:27 IST Report Abuse
ஆப்பு ஆஹா...இது ஒண்ணே போறும்... பொருளாதாரம் 5 டிரில்லியனுக்கு ஒசந்துரும். எல்லோரும் டாஸ்மாக் சரக்கையே வாங்கி பயன்படுத்துவாங்க.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஜன-202021:43:30 IST Report Abuse
A.George Alphonse இதெல்லாம் நம் நாட்டு பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தாது.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
20-ஜன-202005:45:04 IST Report Abuse
 Muruga Velஅந்த மருந்துகள் இந்தியாவிலேயே நெறய இருக்கு .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X