இலவச மின்சாரம், குடிநீர்: தேர்தல் அறிக்கையில் ஆசைக்காட்டும் ஆம்ஆத்மி

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (24)
Advertisement
Delhi, AamAadmiParty, Manifesto, Election, AAP, ArvindKejriwal, 10PointGuaranteeCard, ஆம்ஆத்மி, டில்லி, அரவிந்த்கெஜ்ரிவால், தேர்தல்அறிக்கை,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆம்ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் பிப்.,08ம் தேதி நடக்கிறது. இதற்காக ஆளுங்கட்சியான ஆம்ஆத்மி, பாஜ., இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், '10 பாயிண்ட் கேரண்டி கார்டு' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். பல கவர்ச்சி திட்டங்கள் உள்ளடக்கிய அறிக்கையை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்ட கெஜ்ரிவால் பேசுகையில், இது எங்கள் அறிக்கை அல்ல. அதைவிட இரண்டு படிகள் மேலானது. அதாவது டில்லி மக்களை பாதிக்கும் பிரச்னைகள் குறித்தது, என்றார்.






ஆம்ஆத்மியின் தேர்தல் அறிக்கை:


* 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் மற்றும் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம்.
* 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசம்.
* ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தரமான கல்வி.
* மொஹல்லா கிளினிக்கள் விரிவுப்படுத்தப்படும்.
* உலகத்தரத்திலான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும். பெண்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்து வசதி உறுதி செய்யப்படும்.
* மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி.
* யமுனா நதி சுத்தப்படுத்தப்படும்.
* 300 சதவீதம் காற்று மாசை குறைத்து, காற்றின் தரம் மேம்படுத்தப்படும். சுத்தமான சூழல் உருவாக்கப்படும்.
* ஒவ்வொரு தெருவிலும், தெருவிளக்கு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
* அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் இருக்கம் பகுதிகளில் சாலை, தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து குடிசைவாழ் மக்களுக்கும் வீடு கட்டித்தரப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
20-ஜன-202010:56:33 IST Report Abuse
narayanan iyer டெல்லி மக்கள் சிந்திக்க வேண்டும் . ஒரு முதல்வர் பொறுப்பு வகித்து எந்த துறையையும் தனது வசம் எடுத்துக்கொள்ளாமல் முதல்வர் என்ற பதவியை மட்டும் வகிக்கும் இவரின் வார்த்தைகளை மீண்டும் எடுத்துக்கொள்ளாமல் வாக்களிக்க வேண்டும் . இலவசமாக எதுவும் வேண்டாம் என்ற தாரக மந்திரத்தை போற்றுங்கள்
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
20-ஜன-202010:55:38 IST Report Abuse
narayanan iyer டெல்லி மக்கள் சிந்திக்க வேண்டும் . ஒரு முதல்வர் பொறுப்பு வகித்து எந்த துறையையும் தனது வசம் எடுத்துக்கொள்ளாமல் முதல்வர் என்ற பதவியை மட்டும் வகிக்கும் இவரின் வார்த்தைகளை மீண்டும் எடுத்துக்கொள்ளாமல் வாக்களிக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-ஜன-202009:43:22 IST Report Abuse
 Muruga Vel சொல்லலியா ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X