சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்ஐ கொலை: வதந்தி பரப்பிய காங்., பிரமுகர் கைது

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (31)
Advertisement
எஸ்ஐ, வில்சன், கொலை, பயங்கரவாதிகள், கேரளா, காங்., பிரமுகர், கைது

இந்த செய்தியை கேட்க

நாகர்கோவில் : சுட்டு கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் குறித்து வதந்தி பரப்பியதாக கேரள காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைரோட்டில் சோதனைசாவடியில், பணியில் இருந்த களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் வில்சன்(57) கடந்த 8 ம் தேதி இரவு பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். விசாரணையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வில்சனை சுட்டு கொன்றுவிட்டு, கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அப்துல் சமீம், தவுபிக் இரண்டு பேரையும் களியக்காவிளை போலீசார் கைது செய்து கன்னியாகுமரி கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சார்ந்த அமைப்பினரை கைது செய்ததால், பழிவாங்கும் நோக்கத்தில் வில்சனை கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது.

மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக, தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த மன்சூர், ஜெபிபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரை கைது செய்ததுடன், வில்சன் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டதாக மெஹபூப் பாஷாவையும் , பெங்களூருவில் கைது செய்தனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வில்சன் குறித்து தவறாகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டதாக, கேரள மாநிலம், திருவனந்தபுரம் காங்கிரஸ் பிரமுகர் ஷாகுல் நவாஸ் என்பவரை, புதுக்கடை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
20-ஜன-202013:52:24 IST Report Abuse
pradeesh parthasarathy எச். ராஜா பேசாத பேச்சா ..? அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை ..
Rate this:
Share this comment
Madurai.2020 - Madurai,இந்தியா
22-ஜன-202019:28:39 IST Report Abuse
Madurai.2020திரு.எச். ராஜா இந்த பாரத இந்து நாட்டின் தளபதி. மத்தவங்க ........
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
20-ஜன-202008:40:36 IST Report Abuse
Girija அப்போ ராதாபுரம் அப்பாவு சொன்னது ? டி வியில் பேட்டி கொடுத்தது ? வாட் ஆக்ஷ்ன் காப்ஸ்?
Rate this:
Share this comment
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
20-ஜன-202008:05:28 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Where is media . Where are vck, dmk,dk , cong etc ? Kept mum now,. If any one Hindu is there, these people will conduct separate debate with above party members etc . Hindus should realize these type of partiality. No hindu is against sny common muslim, christian. But against terrorism who invo,ved in this action. In world level Islamic Terrorism is there and all countries including muslim coutries are accepted but our tn parties and cong are supporting in the name of securalism. Why India alone secular country because of vote bank.?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X