பொது செய்தி

இந்தியா

இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020
Advertisement
INDvsAUS, MohammedShami, Jadeja, StevenSmith, Labuschagne, Cricket, ODI, இந்தியா, ஆஸ்திரேலியா, ஒருநாள், கிரிக்கெட், முகமதுஷமி, ஜடேஜா, ஸ்மித், சதம்

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்தார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு ஹேசல்வுட் வாய்ப்பு பெற்றார்.






வார்னர் ஏமாற்றம்


ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், கேப்டன் பின்ச் மோசமான துவக்கம் தந்தனர். ஷமி 'வேகத்தில்' வார்னர் (3) ஆட்டமிழந்தார். பின்ச் (19) ரன் அவுட்டானார். பின், இணைந்த ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் பொறுப்புடன் விளையாடினர். ஜடேஜா பந்தில் லபுசேன் (54) அவுட்டானார். ஸ்டார்க் டக் அவுட்டானார். அபாரமாக விளையாடிய ஸ்மித் ஒரு நாள் அரங்கில் 9வது சதம் அடித்தார். டர்னர் 4 ரன்களில் திரும்பினார்.




ஷமி பந்தில் ஸ்மித் (131), கம்மின்ஸ் (0) ஆட்டமிழந்தனர். முடிவில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. ஏகார் (11), ஹேசல்வுட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X