தவறான படம் பார்க்கவா இணையம்? நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (14)
Advertisement
NITI_Aayog, Saraswat, Internet, DirtyFilms, சரஸ்வத், நிதிஆயோக், உறுப்பினர், காஷ்மீர், இணையம், இணையசேவை, தவறான_படம்,

காந்திநகர்: காஷ்மீரில் இணையம் இருந்தால் தவறான படங்களை தவிர வேறு எதையும் பார்க்க மாட்டார்கள், என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ம் தேதி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து மாநிலத்தின் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பாதுகாப்புப் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டதுடன், தொலைத் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டன. தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்திக் கொள்ளப்பட்டு வருகின்றன.


காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு ஐந்து மாதங்களாக இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் சேவை 
துண்டிப்பை நியாயப்படுத்தி, நிதி ஆயோக் அமைப்பின் வி.கே.சரஸ்வத் பேசினார். ''சமூக வலைதளங்கள் மூலம் சட்டம் ஒழுங்கை குலைத்து விடுவார்கள் என்பதற்காகத்தான் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது; காஷ்மீரில் இண்டர்நெட் இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இண்டர்நெட் இருந்தாலும் என்ன பார்ப்பீர்கள்? அசிங்கமான படங்களை பார்ப்பதைத் தவிர இண்டர்நெட்டை வைத்து வேறெதையும் செய்யப்போவதில்லை'' என்று சரஸ்வத் கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



நேற்று (ஜன.,18) முதல் ப்ரீபெய்டு மொபைல் போன்களுக்கான எஸ்எம்எஸ்., மற்றும் வாய்ஸ்கால் சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால், இன்னும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சூழல் வெளியே தெரியாமல் மறைக்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.




இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நிதிஆயோக் குழு உறுப்பினர் வி.கே.சரஸ்வத் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அரசியல்வாதிகள் காஷ்மீருக்கு செல்ல ஏன் விரும்புகிறார்கள்? அவர்கள் அங்குள்ள சாலைகளில் மீண்டும் போராட்டம் நடத்த முயற்சி செய்கிறார்கள். மேலும், மக்களை தூண்டுவதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்.

இணைய சேவை இல்லையென்றால், என்ன ஆகிவிடப்போகிறது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இணையம் இருந்தால், அதில் தவறான படங்களை பார்ப்பதை தவிர வேறு எதையும் பார்க்க மாட்டார்கள். காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்படுவதற்கான காரணம், தவறான தகவல்கள் பகிரப்படும் என்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.





மன்னிப்பு


சரஸ்வத்தின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து அவர் விளக்கம் அளிக்கையில், நான் அங்குள்ள சூழலில் இருந்து மேற்கோள் காட்டினேன். இந்த தவறான குறிப்பு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
20-ஜன-202011:08:23 IST Report Abuse
pattikkaattaan சில சமயத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், (தாங்கள் செய்த) உண்மையை உளறிவிடுகிறார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
rajan - erode,இந்தியா
20-ஜன-202009:34:17 IST Report Abuse
rajan கர்நாடக சட்டசபை நடந்தபோது பிஜேபி mla என்ன செய்தார் என்பதை சுட்டி காட்டுகிறார்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
20-ஜன-202006:08:39 IST Report Abuse
Nallavan Nallavan ட்ரேஸ் செய்வது மிகவும் எளிது ....... வி.பி.என். உபயோகித்தாலும் கண்டுபிடித்துவிடலாம் ....... தகவல் தெரிந்தால்தான் இப்படிப் பேசியிருக்கிறார் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X