சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிஏஏவுக்கு எதிராக வழக்கு: கேரள அரசிடம் விளக்கம் கேட்கும் கவர்னர்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (4)
Advertisement
Kerala, CAA, TopCourt, Upset, Governor, Report,

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து தன்னிடம் தகவல் தெரிவிக்காதது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி, கேரள அரசுக்கு, அம்மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, இச்சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்த கவர்னர் ஆரிப் கான், அரசியலமைப்பின்படி மாநிலத்தின் தலைவரான தன்னிடம், அனுமதி பெறாமல், வழக்கு தொடர்ந்துள்ளது. இது நெறிமுறைமீறல். மரியாதை மீறல் எனக்கூறியிருந்தார்.




இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து தன்னிடம் தகவல் தெரிவிக்காதது குறித்து அறிக்கை அளிக்கும்படி, மாநில தலைமை செயலாளருக்கு, கவர்னர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், கேரள அரசு, என்னிடம் தெரிவிக்காமல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது குறித்து, அறிக்கை தருமாறு, கேரள அரசை கேட்க உள்ளேன். குடியுரிமை அளிப்பது, மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அது, மாநில அரசுகளுக்கு பொருந்தாது. மாநில அரசுகள், அரசியல் சாசனம், 254ம் பிரிவின் கீழ் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை, எனக்கூறியிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
20-ஜன-202004:37:32 IST Report Abuse
RajanRajan RSS ஐப் பற்றியும், அமீத்ஷா பற்றியும், மோதிஜி பற்றியும் வாய்கிழிய பேசும் கம்யூனிஸ்ட்களுக்கு அதன் தலைவர் சீதாராம் யேச்சூரியின் கதை ஒன்று தெரிய வேண்டும். 1975 இல் எமர்ஜென்ஸியின் போது JNU விற்குள் டெல்லி போலீஸோடு நுழைந்தார் இந்திரா காந்தி. அப்போது JNU ஸ்டூடண்ட் யூனியன் தலைவராக இருந்தவர்தான் இந்த சீதாராம் யேச்சூரி. இவரை அடித்து உதைத்து... JNUSU விலிருந்து ரிஸைன் பண்ண வைத்து.. அனைவர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்க வைத்தார் இந்திரா காந்தி. இதுதான் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது என்பது. இதனை இப்போது மோதிஜியோ.. அமீத்ஷாவோ செய்யாதது ஒருவேளை இவர்களுக்குக் குறையாக இருந்தால்.. அதனையும்.. ஏன் அதற்கு மேலேயும் செய்யும் எல்லாத் தகுதிகளும், பெரும்பான்மை பலமும் இவர்கள் இருவருக்கும் உண்டு என்பதை கம்யூனிஸ்ட்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
19-ஜன-202022:20:16 IST Report Abuse
KavikumarRam 356 சட்டத்த போட்டு இந்த கேரளா சீனாக்காரன் கலைச்சு விடுங்க கவர்னர் சார். அங்கெ நக்சலைட் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-ஜன-202018:57:19 IST Report Abuse
S.Baliah Seer கேரள அரசு CAA -வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர்தான் சட்ட ரீதியாக CAA -வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.அதற்கு கேரள கவர்னரை எதற்காக கன்சல்ட் செய்யவேண்டும் ?இவரை கன்செல்ட் செய்து என்ன ஆகப்போகிறது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X