பொது செய்தி

இந்தியா

முடங்கிய வாட்ஸ்ஆப்: பயனாளர்கள் தவிப்பு

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (14)
Advertisement
WhatsAppDown, #WhatsApp#, MediaFiles, வாட்ஸ்அப், முடக்கம், பாதிப்பு

புதுடில்லி: இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலி முடங்கியதால் பயனாளர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் முக்கியமான செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப், உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம், தகவல்கள், போட்டோ, வீடியோ, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கு பகிர இந்த செயலி பயன்படுவதால் உலகின் பெரும் தகவல் தொடர்பு செயலியாக கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜன.,19) மாலை 4 மணி முதல் சில மணிநேரம் வாட்ஸ்ஆப் செயலி முடங்கியது. இதனால் செயலி மூலம் போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட எதையும் பகிர முடியாமலும், பகிரப்பட்ட மீடியா பைல்களை பதிவிறக்கம் செய்யமுடியாமலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பயனாளர்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.





இந்தியா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பா நாடுகளில் முடங்கியது. இதனை குறிக்கும் வகையில் #WhatsAppDown என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரண்டானது. திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. இருப்பினும் 3 மணி நேரத்திற்கு பின்னர் தானாகவே சீரானது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
20-ஜன-202010:59:12 IST Report Abuse
Abdul Rahman சீனாவில் WhatsApp, YouTube , Facebook banned . கிடையாது.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
21-ஜன-202015:59:10 IST Report Abuse
 Muruga Velதினந்தோறும் வாட்டசாப்பில் சீனாவில் இருக்கும் உறவினருடன் தகவல் பரமாறிக்கொண்டிருக்கிறேன் … அங்கே நீங்க காலம் தள்ளறது கஷ்டம் .....
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
19-ஜன-202023:40:52 IST Report Abuse
J.Isaac சிறியோர் முதல் முதியோர் வரை அரசன் முதல் ஆண்டி வரை சமுதாய சீரழிவிலிருந்து பாதுகாக்கப்பட அரசு எல்லா துறைகளும் பணிநேர இழப்பின்றி செயல்பட வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் இருக்கக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
19-ஜன-202022:49:06 IST Report Abuse
ரமேஷ் பழைய மாணவர்கள் என்று சொல்லிக்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாட்ஸாப் குரூப்புகளில் பல தேசவிரோதிகளுக்கு விலைபோய்விட்ட உறுப்பினர்கள் தேசவிரோத, பிரிவினைவாத மற்றும் மத அடிப்படைவாத, இனவாத கருத்துக்களையும், ஆளும் அரசாங்கத்துக்கு எதிராகவும், பொது அமைதி மற்றும் இணக்கத்துக்கு எதிராகவும் பல விஷ பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து வாட்ஸாப் குழுக்களும் இப்படிப்பட்ட வெருப்பு பரப்புதல் தொடர்பாக கண்காணிக்கப்பட்டு அதன் அட்மின்கள் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X