பொது செய்தி

இந்தியா

ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (14)
Advertisement
Shirdi, Saibaba, Bandh, Maharashtra, மஹாராஷ்டிரா, ஷீரடி, சாய்பாபா, பந்த்

ஷீரடி: மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில், முழு அடைப்பு போராட்டம் இன்று (ஜன.,19) நடந்தது. அதே நேரத்தில், சாய்பாபாவின் கோவில் திறந்திருந்தது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. 'சாய்பாபா பிறந்த இடமான, பர்பானி மாவட்டம் பாத்ரியில், 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு, சாய்பாபா கோவில் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
'சாய்பாபா பிறந்த ஊர் குறித்து எந்த குறிப்பும், ஆதாரமும் இல்லை' என, அவர்கள் கூறியுள்ளனர். 'உத்தவ் தாக்கரேயின் பேச்சைக் கண்டித்து, ஷீரடியில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் போராட்டம் இன்று துவங்கியது. ஷீரடி மற்றும் அதை சுற்றியுள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் பங்கேற்றன. கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், தனியார் போக்குவரத்து செயல்படவில்லை.
அதே நேரத்தில் கோவில் திறந்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம் செய்தனர். கோவிலின் உணவு வழங்கும் மையமும் செயல்பட்டது. விமான நிலையத்தில் இருந்து, ஷீரடிக்கு தனியார் டாக்சிகள் இயக்கப்பட்டன; பஸ்களும் இயங்கின. பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், இந்தப் போராட்டம் நடந்தது. இந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, மாநில அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. அதில், ஷீரடி பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202013:54:29 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இருநூறு வருடங்களுக்கு முன் பிறந்தவரின் ஊர் தெரியாமல் போய்விடுமா ? அதுவும் மக்களால் வழிப்படக்கூடிய ஒருவரின் பூர்வீகம் தெரியாமல் போகவாய்ப்பில்லை . திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது . இவர் ஒரு இஸ்லாமியர் , அனைவர்க்கும் கடவுள் ஒருவரே , அந்த கடவுள் அல்லாஹ் தான் என்று சொன்னவர். அவர் வாழ்ந்தது ஒரு மசூதி , அவர் அணிந்துகொண்டு ஆடை மட்டுமே காவி. இப்போது கிருத்துவத்தில் கூட பலபேர் காவி அணிகிறார்கள் , இவை அனைத்துமே இந்துக்களை மதம் மாற்ற.
Rate this:
Share this comment
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
20-ஜன-202018:06:33 IST Report Abuse
வந்தியதேவன்அண்ணாமலை ஜெயராமன் சார்... ///அவர் அணிந்துகொண்டு ஆடை மட்டுமே காவி./// 1917-ல அவர்கூட ஷீர்டி கிராமம் முழுவதும் சுற்றி வந்த மாதிரி கமெண்ட் போட்டிருக்கீங்க...? 1917-ல் ஆங்கிலேயர் ஒருவர் தன் மகளை இவருடன் நிற்க வைத்து எடுத்த படத்தை பாருங்கள்... அவர் 'கபீனி' எனும் அழுக்குடன் கிழிந்துபோன வெள்ளைச் சாக்கு உடையை அணிந்திருந்தார்... “காமாலை வந்த கண்ணுக்கு தெரிவதெல்லாம் மஞ்சள்”...ங்கற கதையா... ட்ரஸ் போட்டுகிட்டு சுத்துற ஆளெல்லாம் காவி நிற ஆடைதான் கட்டியிருக்காங்க...ன்னு சொல்றீங்க...? விட்டா... எமர்தர்ம ராஜனே.... காவி நிற ஆடைதான் கட்டியிருக்கிறார்...னு சொல்லுவீங்க போலிருக்கே...? அப்படி சொன்னாலும்.. அல்லக்கைங்க, நொள்ளக்கைங்க எல்லாரும் ஆமா, ஆமா... நேத்துதான் எமர்தர்ம ராஜனை நேரில் பார்த்தேன்... காவி கலர் ட்ரஸ் போட்டிருந்தார்...னு சொல்வாங்க... இதைச் சொன்னாகூட பரவாயில்ல... விட்டா... அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..பே காவி கலர் வேட்டியும், காவிக் கலர் துண்டும் போட்டுகிட்டு... ஜடா முடியுடன் வந்தார்...னு சொல்லி ஊரை ஏமாத்துவீங்க போலிருக்கே...? சாய்பாபா காலத்துல உங்கள போன்ற ஆட்கள் எல்லாம் பாரத நாட்டில் இல்லை... அதுனால... இந்த மகான் சாய்பாபா தப்பிச்சாரு... இல்லென்னா அவரையும் உங்க காவிக் கும்பலில் சேர்த்திருப்பீங்க... அதுனாலதான் அவர் “அல்லா மாலிக் ஏக் ஹே”...ன்னு சொல்லிட்டு இருந்தாரு...?...
Rate this:
Share this comment
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
20-ஜன-202012:07:50 IST Report Abuse
வந்தியதேவன் தன்னைத்தானே உணர்ந்தவன்தான் “சித்தன்” எனப்படுபவன்... “ஜீவாத்மா” எனும் மனிதன், தன்னுள் இருக்கும் “பரமாத்மா” எனும் கடவுளை உணர்ந்தவனே “சித்தன்”... இந்த சித்தன் காட்டில் இருந்தாலும், நாட்டில் இருந்தாலும் “பித்தனை” போல சுற்றித் திரிவான்... உணவு, உடை, இருப்பிடம், ஆசை, காமம், குரோதம், லோபம் போன்ற மாச்சரியங்களை கடந்து, எங்கும், எதிலும் அக்கறை கொள்ளாமல்... “சித்தன் போக்கு, சிவன் போக்கு”... என்று நம் பெரியோர்களால் சொல்லப்பட்டவனைப் போல சுற்றித் திரிவான்... உணவு கிடைத்தால் உண்பான், இல்லையென்றால் பட்டினிதான்... தன்னிலை மறந்து இறைநிலை அடைந்த இந்த “சித்தர்கள்” என்று நம் வேத, புராணங்கள் சொல்கிறது... அப்படி கபீனி எனும் அழுக்குடன் கிழிந்துபோன வெள்ளைச் சாக்கு உடையை அணிந்து... வீடு வீடாகச் சென்று பிச்சை (யாசகம்) பெற்று.. அந்த உணவையையும் நாய், பூனை போன்ற விலங்கு, பறவைகளுக்கு அளித்து, காடுமேடு, ஊர் என சுற்றித் திரிந்தவன்தான் இந்த 'பக்கீர்” என்றழைக்கப்படும் பக்கிரி சாய்பாபா... எனக்கு தெரிந்து மடம் எனும் தங்கும் இடம்.... தனக்கு சேவகம் செய்திட “சீடர்கள்”... அந்த மடத்தை பராமரித்திட பணம் பெற்று, அதில் மடத்திற்காக நிலம், இடம், மனை போன்றவற்றை வாங்கி போடாமல்.. பாரத மண்ணில் இருந்த ஒரே சித்தர், பக்கிரி... அவர் மறைந்த பின்னர்தான், சன்ஸ்தான் எனப்படும் தேவஸ்தானம், சமாதி ஆகிய இடங்களை வாங்கி, உண்டியல் வைத்து வசூலித்துள்ளார்கள்... ஆனால், அந்த பக்கீர் சாய்பாபா உயிரோடு இருந்தவரை, தான் தங்கியது இடிந்துபோன ஒருமசூதியில்தான்... . இன்றைக்கு இந்தியாவில் சாமியார் என்று சொல்லப்படும் பணம், புகழ், கார், பங்களா, விமானப்பயணம், மடம், இடம் மற்றும் இத்யாதி, இத்யாசி போன்றவற்றை சேர்த்து வைத்த “கேப்மாரி”களுடன்... இந்த இந்த பக்கீர் (பிச்சைக்காரன்) என்றழைக்கப்படும் சாய்பாபா...வை சேர்த்துவிடாதீர்கள்... ஏனெனில், இவர் இந்துவா, முஸ்லீமா என்று தெரியாது... பெற்றோர் யார் என்று தெரியாது... குலம் கோத்திரம் தெரியாது... எந்த ஊர் என்றும் தெரியாது... ஒன்று மட்டும் தெரியும்.. அவர் பிச்சை எடுத்து வாழ்ந்தது மற்றும் அவர் மறைந்த இடம் அது மட்டுமே...? மற்றபடி கற்பனைகளுக்கும், ஊகங்களுக்கும் இடந்தரக்கூடாது... இந்த மகானைப் போல... இந்தியாவில் எந்த ஒரு மகானும் இல்லை... காரணம், இவருக்கு சொந்தமாக வீடோ, மனையோ, காசோ, பணமோ, மடமோ, சீடர்களோ (குறிப்பாக சின்ன பெண்கள்) இல்லாமல்.... தான்தான் கடவுளின் அவதாரம் என்றும், தான் கடவுளின் சீடன் என்றும் பொய் சொல்லியும், டகால்டி வேலைகளும் செய்யாமல்... என்னை உள்ளிட்ட வேறு எவரையும் கடவுள் என்றும், தெய்வம் என்றும், இறைவன் என்றும் தொழாதீர்கள்... “அல்லா மாலிக் ஏக் ஹை.. (கடவுள் ஒருவனே)” என்றும்... அவனை மட்டுமே வணங்குங்கள், என்று சொல்லி உண்மையான சித்தனாய் வாழ்ந்து மறைந்தவர் இந்த ஷீர்டி சாய் பாபா... இந்த மகானை இப்ப நாட்ல சுற்றிக் கொண்டிருக்கும் போலிச் சாமியார், பொம்பள .................... சாமியார், ஏமாற்றி சித்து வேலை காட்டி படித்த அறிவாளிகளைகூட ஏமாற்றும் ஆரஞ்சு கலர் வேட்டி கட்டி ஏமாற்றம் சாமியார்... தான்தான் கடவுள் என்று ஏமாற்றும் சாமியார்... போன்ற “போலிச் சாமியார்”களுடன்... இந்த சித்தனை, மகானை அந்த லிஸ்ட்ல சேர்த்துவிடாதீர்கள்...
Rate this:
Share this comment
20-ஜன-202013:50:53 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்அல்லாஹ் மாலிக் என்றால் அல்லாஹ் மட்டும் கடவுள் என்று இஸ்லாமிய கடவுளை தான் அவர் வழிகாட்டினார் , காவி வேடம் போட்டது இந்து மக்களை மதம் மாற்ற , புரிகிறதா ?...
Rate this:
Share this comment
Panorama - Chennai ,இந்தியா
22-ஜன-202014:19:48 IST Report Abuse
Panoramaமேலே குறிப்பிட்ட செய்தியில் ஒரு சின்ன திருத்தம். பாபா என்ன சொன்னார் என்றால் "Sabhka Malik Ek Hai". அதாவது எல்லோருக்கும் எஜமான் (கடவுள்) ஒன்றுதான் என்பது. மேலும் அவர் "அல்லாஹ் மாலிக்", "அல்லாஹ் மாலிக்" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். அவர் காவி உடை தரித்திருந்தார் என அவரது சச்சரித்ததிலோ அல்லது வேறு எந்த publishing லோ குறிப்பிடப்படவில்லை. அவர் யாரையும் எப்போதும் மதம் மாற்ற முயற்சித்தது கிடையாது அதுபோல மதம் மாறியவரும் கிடையாது. அவர் ஸ்ரீ.தத்தாத்ரேயரின் அவதாரம் என்று கூட அவரது பக்தர்களில் பலபேர் சொல்வதுண்டு....
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
20-ஜன-202006:18:38 IST Report Abuse
Nathan குவாஜா சாஹிப் பாபா இதையெல்லாம் மீறியவராகவே நம்பி மக்களால் வழிபடப் பெறுகிறார். அவர் தன்னை ஏழை பக்கிறாகவே நினைத்து அல்லாவே தலைவன் எனவும் வருணித்துக் கொண்டவர். இதெல்லாம் ஏதும் செய்யாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X