அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கொள்கை முடிவு எடுங்க: ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (23)
Advertisement
DMK, Stalin, Hydrocarbon, ADMK, BJP, திமுக, ஸ்டாலின், ஹைட்ரோகார்பன், கொள்கைமுடிவு, அதிமுக, பாஜ, பாஜக

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பாஜ., அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். நாளை (ஜன.,20) கூடும் அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்கை முடிவு எடுத்து தமிழக மக்களின் நலன்களை காப்பாற்றிட வேண்டும். ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டமும் தேவையில்லை என்று, சுற்றுச்சூழலையும் வெகுமக்கள் எண்ணத்தையும் பின்னுக்குத் தள்ளிச் சிறுமைப்படுத்தி, பாஜ., அரசு கார்ப்பரேட் அணுகுமுறையுடன் அறிவித்திருப்பதை திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் இந்த திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என அதிமுக அரசு, சட்டசபையில் உறுதியளித்தது. ஆனால், அதுதொடர்பாக இதுவரையில் எந்தவித கொள்கை முடிவையும் எடுக்காமல், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, பாஜ., அரசின் செயலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து நடைபாவாடை விரித்து வரவேற்று வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு கூட இதுவரை அறிவுரைகள் வழங்கவில்லை. விவசாயிகளின் நலன்களை புறந்தள்ளி பாஜ.,-அதிமுக கூட்டு சேர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் உதவி, உற்சாகப்படுத்துகிறது. இதனை காவிரி டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச் செயலாகவே திமுக., கருதுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
20-ஜன-202003:32:39 IST Report Abuse
B.s. Pillai If it is true that the BJP Government has by passed the clearance from Environment ministry and does not hear the views of General Public, it is setting a bad example and precedence. In a democracy, the views of the public only counts, though there is majority in the Assembly or in Parliament. Hydro Carbon is not necessary. India has developed witiout this scheme so far last 70 years. If we do something against Environment, we contribute directly for global warming. There are many small islands in Pacific Ocean got immersed in sea within last 10 years and many omre will be covered with sea water within another 10 years. The sea level raises 07 to 10mm every year. Unless otherwise we stop green house emmission, our grand children would loose many parts of the Globe and unseasonal changes in climate will result in uncontrollable fire like what happened this year in Australia. We have our duty and responsibility to hand over this Earth in good condition to our children and their heirs. BJP government is advising and has become a symbol for environment safety and it should not do any such thing inside its own country contrary to its global stand.
Rate this:
Share this comment
Cancel
மனு நீதி - Chennai,இந்தியா
20-ஜன-202002:50:10 IST Report Abuse
மனு நீதி இந்த திட்டத்தில் தானே ஜப்பான் துணை முதல்வராக இருந்தபோது தெரியாமல் வெத்து பேப்பர்ல கையெழுத்து வாங்கினாங்க... சுடலை பல்டி சூப்பர்.
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜன-202002:24:16 IST Report Abuse
ManiS Sir idhu namakke oru .... thanamaa thonala? CAA va marandhuteengalaa??? adhu sari.... adhaaaan ullaathchi therdhalla makkala yemaathiyyachu.. ippa idhuvaaaa? Nadathunga.. Thuklakak padathula Cho sonna ore vaasagam en naavil olikindradhu.. vaanga thirumba naanga vaanga pora nilathula comission adinga... Madhurai anjaa nenjanukkum unakkum solliyaa kodukanum. Sethaan Thamizhan.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X