பொது செய்தி

இந்தியா

தொடரை வென்று இந்தியா அசத்தல்: ரோகித், கோஹ்லி அபாரம்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (5)
Advertisement

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சதம் விளாச இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை வென்று கோப்பையை வசமாக்கியது.





இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு ஹேசல்வுட் வாய்ப்பு பெற்றார்.





வார்னர் ஏமாற்றம்

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், கேப்டன் பின்ச் மோசமான துவக்கம் தந்தனர். ஷமி 'வேகத்தில்' வார்னர் (3) ஆட்டமிழந்தார். பின்ச் (19) ரன் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் பொறுப்புடன் விளையாடினர். ஜடேஜா பந்தில் லபுசேன் (54) அவுட்டானார். அபாரமாக விளையாடிய ஸ்மித் ஒரு நாள் அரங்கில் 9வது சதம் அடித்தார். ஷமி பந்தில் ஸ்மித் (131), கம்மின்ஸ் (0) ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. ஏகார் (11), ஹேசல்வுட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட் கைப்பற்றினார்.





ரோகித் விளாசல்

இந்திய அணிக்கு ரோகித், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் அளித்தது. ராகுல் 19 ரன்களில் அவுட்டானார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த ரோகித் ஒரு நாள் அரங்கில், 29வது சதம் அடித்தார். கோஹ்லி அரை சதம் கடந்தார். ஜாம்பா 'சுழலில்' ரோகித் (119) சிக்கினார். கோஹ்லி 89 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினார். மணிஷ் பாண்டே பவுண்டரி அடிக்க, இந்திய அணி 47.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் (44), மணிஷ் பாண்டே (8) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து, இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை வென்றது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஜன-202016:27:19 IST Report Abuse
இந்தியன் kumar ரோஹித் கோலி இருவரில் ஒருவர் சதம் கடந்தால் இந்தியா வெற்றி உறுதி.
Rate this:
Share this comment
Cancel
20-ஜன-202009:55:38 IST Report Abuse
ருத்ரா மிகமிக மகிழ்ச்சி. மனசெல்லாம் மத்தாப்பூ. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய் ஸ்ரீ ராம் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X