பொது செய்தி

இந்தியா

மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (70)
Advertisement
Kerala, HinduMarriage, Mosque, PinarayiVijayan, CM, கேரளா, ஹிந்துதிருமணம், மசூதி, பினராயிவிஜயன், முதல்வர்

ஆலப்புழா: கேரளாவில், மசூதியில், ஹிந்து முறைப்படி, ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர், பிந்து. இவரது கணவர் அசோகன் இறந்து விட்டார். இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார். தன் கணவர் அசோகன் இறந்தபின், மிகவும் கஷ்டப்பட்டு, வாழ்க்கை நடத்தி வருகிறார், பிந்து.இந்நிலையில், தன் மகள் அஞ்சுவுக்கும், சரத் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க, பிந்து ஏற்பாடு செய்தார். திருமண செலவுக்கு பணம் இல்லாததால், செருவாலி முஸ்லிம் ஜமாத்தின் செயலர், நிஜுமுதீன் அலுமூட்டிலிடம், உதவி கேட்டார். இது பற்றி, ஜமாத் நிர்வாகிகளுடன், அலுமுட்டி ஆலோசனை நடத்தினார். பிந்துவின் மகள் திருமணத்துக்கு உதவ, ஜமாத் சம்மதித்தது.




அஞ்சுவுக்கு, 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு பொருட்களும், ஜமாத் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அஞ்சுவின் திருமணத்தை, மசூதி வளாகத்திலேயே, ஹிந்து முறைப்படி நடத்த, அப்போது முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜன.,19) காலை, செருவாலி மசூதியில், அஞ்சுவுக்கும், சரத்துக்கும், ஹிந்து முறைப்படி, வேத மந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தது. திருமணத்துக்காக, ஜமாத் சார்பில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, சைவ உணவு விருந்து தயாரிக்கப்பட்டது.




திருமணத்தில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பெரும் அளவில் பங்கேற்று, விருந்து சாப்பிட்டு, மணமக்களை வாழ்த்தினர். மசூதியில் ஹிந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக, கேரளா எப்போதும் விளங்குகிறது. 'மதத்தின் பெயரால், மக்களை பிளவுப்படுத்தும் முயற்சி நடந்து வரும் வேளையில், இந்த திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது' என, கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
21-ஜன-202009:22:08 IST Report Abuse
Muthukrishnan,Ram இன்றல்ல நேற்றல்ல புராண காலத்திலிருந்தே இஸ்லாமியர்களும், இந்துக்களும் மாமன் மைத்துனர்களாக அதாவது குடும்ப நபர்களாகத்திதான் கருதுகிறார்கள். ஆனால் சில அரசியல் காரணங்களுக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் இவ்விரு மதத்திணறும் பிரித்து வைக்கப்படுகின்றனர். இந்த மதங்களின் ஒற்றுமையை திருப்பதியில் காணலாம். சபரிமலையில் காணலாம்.
Rate this:
Share this comment
Cancel
M. Ashokkumar - Hyderabad,இந்தியா
21-ஜன-202006:25:32 IST Report Abuse
M. Ashokkumar எதை செய்தாலும் குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கும். திருமணம் செய்து வைத்த நல்ல உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel
M. Ashokkumar - Hyderabad,இந்தியா
21-ஜன-202006:20:59 IST Report Abuse
M. Ashokkumar வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X