எந்த பாதிப்பும் இல்லை!

Added : ஜன 19, 2020
Share
Advertisement
 எந்த பாதிப்பும் இல்லை!


ஜம்மு - காஷ்மீரில் இணைய சேவை, ஆறு மாதங்களாக துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால், பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆபாச படங்களை பார்ப்பதற்கும், சமூக வலைதளங்கள் மூலமாக போராட்டங்களை துாண்டி விடுவதற்கும் தான், இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். -வி.கே.சரஸ்வத்உறுப்பினர், நிடி ஆயோக்
அது அவ்வளவு எளிதல்ல!
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்த மாட்டோம் என, சில மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை பின்பற்ற முடியாது என, மாநில அரசுகள் கூற முடியாது; நம் அரசியல் அமைப்பு சட்டப்படி, அது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலம் மட்டுமே, இந்த பிரச்னையை தீர்க்க முடியும். -கபில் சிபல்முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்
விஷப் பரீட்சை வேண்டாம்!
ஆந்திர தலைநகரை அமராவதியிலிருந்து மாற்றும் விஷப் பரீட்சையில் ஈடுபடுவதை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தவிர்க்க வேண்டும். இதுபோன்ற விபரீத முடிவால், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை திரும்ப பெறும் அபாயம் ஏற்படும். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். பழிவாங்கும் அரசியலை தவிர்க்க வேண்டும். -சந்திரபாபு நாயுடுதலைவர், தெலுங்கு தேசம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X