இலங்கை பாதுகாப்புக்கு இந்தியா ரூ.350 கோடி

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (8)
Advertisement
 இலங்கை,பாதுகாப்பு,இந்தியா, ரூ.350 கோடி

கொழும்பு: கொழும்புவில், இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவுடன், இருநாட்டு பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, இந்தியா சார்பில், 350கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இரு நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி அஜித் தோவல், நேற்று முன்தினம் இலங்கை சென்றார். பேச்சுஅங்கு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயுடன், தேசிய பாதுகாப்பு, உளவுத் துறை தகவல் பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்குமான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சு நடத்தினார்.

இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தியா இடையேயான, கடல் மண்டலம் தொடர்பான உளவுத்துறையை மறுஆய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிய அஜித் தோவல், இந்த செயல்முறைக்கு மற்ற நாடுகளையும் பார்வையாளர்களாக கொண்டு வர வேண்டும் என்றார். தோசவலுடன் நடந்த பேச்சு குறித்து இலங்கை அதிபர் கோத்தபய திருப்தி தெரிவித்துள்ளார். ''இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, விவாதத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது,'' என்று, அவர் கூறினார்.

இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளின் ஆயுதப்படை, கடலோர காவல்படைக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து விவாதிக்கப் பட்டது. ஆலோசனைபிராந்திய கடல் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, 350 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என, இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
20-ஜன-202010:35:16 IST Report Abuse
Anandan இலங்கையை நம்பி ஏமாறும் மூடர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
20-ஜன-202010:34:22 IST Report Abuse
Anandan இலங்கையை நம்பி ஏமாறும்
Rate this:
Share this comment
Cancel
20-ஜன-202010:31:40 IST Report Abuse
ஆப்பு அடுத்த அமைச்சரவையில் இவர் இடம் பெறுவார் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X