இலவச பஸ் பயணம், மின்சாரம்: முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவாதம்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (6)
Advertisement
இலவ,பஸ் பயணம்,மின்சாரம்,முதல்வர்,கெஜ்ரிவால் உத்தரவாதம்

புதுடில்லி:மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம், பொது மக்களுக்கு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட, 10 உத்தரவாதங்களை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு, பிப்ரவரி, 8ம் தேதி, தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்கி வருவதால், கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தையும் துவங்கிஉள்ளன.

இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் அறிக்கையாக, 10 உத்தரவாதங்களை, வெளியிட்டார். மீண்டும் ஆம் ஆத்மி அரசு அமைந்தால், மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம், பெண்கள் பாதுகாப்புக்காக, சாலைகளில் பாதுகாவலர்களை நிறுத்துதல், 24 மணிநேர மின்சார வினியோகம், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.இலவச சுகாதார வசதிகள், இரண்டு கோடி மரக்கன்றுகளை நடுதல், யமுனை நதியை துாய்மைப்படுத்துதல், மாசை கட்டுப்படுத்துதல் ஆகியவை அதில் இடம்பெற்றிருந்தன.

செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லி மக்களுக்கு, 10 உத்தரவாதங்களை நான் வழங்குகிறேன். இது, தேர்தல் கால வாக்குறுதி அல்ல. விரிவான தேர்தல் அறிக்கையை, அடுத்த, 10 நாட்களுக்குள் வெளியிடுவோம்.அந்த தேர்தல் அறிக்கையில், மாணவர்கள், ஆசிரியர்கள் என, அனைவருக்குமான பல விஷயங்கள், இடம்பெற்றிருக்கும்.மீண்டும் ஆம் ஆத்மி அரசு அமையாது என்றும், நான் அறிவித்துள்ள திட்டங்கள், மார்ச், 31ம் தேதி வரை மட்டுமே நீடிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

ஆம் ஆத்மி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiru - Chennai,இந்தியா
20-ஜன-202017:02:34 IST Report Abuse
Thiru ஹூம் ... எப்படி திருடர் முன்னேற்ற கலக்கம் படி அரிசி ஒரு ரூபா என்று வீதி வீதியாக கூவி கூவி மக்களை ஏமாற்றி காங்கிரெஸ்ஸை கவுத்து அரச கட்டிலை கைப்பற்றியாதோ அதேபோல் கெச்சிறி ஆரம்பித்து விட்டார். எப்படி திருடர் முன்னேற்ற கழகம் கோடிகளையும், கேடிகளையும் கையில் வைத்துள்ளதோ (கோடிகளை வாரிசுகள் காவலாக) அப்படியே கெச்சிரிவாலும் கையில் கருப்பை அல்லாமல் இருந்தால் சரி. ஓசி என்பது பிச்சை வாங்குவதற்கு சமம். அப்படி பணம் அரசு கஜானாவில் இருந்தால் வேறு பல நல்ல செயல்களை செய்யலாமே. (செயல்களின் பட்டியல் பெரியது)
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
20-ஜன-202012:06:17 IST Report Abuse
Allah Daniel இந்த அரசியல் சிகண்டியை..இரண்டு முறை CM ஆகிய டெல்லி மக்களுக்கு இவனே சரி
Rate this:
Share this comment
Cancel
20-ஜன-202011:11:54 IST Report Abuse
srinivas Raj ஒருவேளை இவர் நாட்டின் பிரதமர் வேட்பாளாளராக நின்றால் விமான பயணமும் இலவசமாக கொடுக்கப்படும் என அறிவித்தாலும் அறிவிப்பார்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X