பொது செய்தி

இந்தியா

மசூதியில் ஹிந்து திருமணம் கேரள முதல்வர் பாராட்டு

Added : ஜன 19, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 மசூதியில் ஹிந்து திருமணம்  கேரள முதல்வர் பாராட்டு

ஆலப்புழா:கேரளாவில், முதல்வர்பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர், பிந்து. இவரது கணவர் அசோகன் இறந்து விட்டார்.
இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார். தன் கணவர் அசோகன் இறந்தபின், மிகவும் கஷ்டப்பட்டு, வாழ்க்கை நடத்தி வருகிறார், பிந்து.இந்நிலையில், தன் மகள் அஞ்சுவுக்கும், சரத் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க, பிந்து ஏற்பாடு செய்தார். திருமண செலவுக்கு பணம் இல்லாததால், செருவாலி முஸ்லிம் ஜமாத்தின் செயலர், நிஜுமுதீன் அலுமூட்டிலிடம், உதவி கேட்டார். இது பற்றி, ஜமாத் நிர்வாகிகளுடன், அலுமுட்டி ஆலோசனை நடத்தினார். பிந்துவின் மகள் திருமணத்துக்கு உதவ, ஜமாத் சம்மதித்தது. அஞ்சுவுக்கு, 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு பொருட்களும், ஜமாத் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அஞ்சுவின் திருமணத்தை, மசூதி வளாகத்திலேயே, ஹிந்து முறைப்படி நடத்த, அப்போது முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை, செருவாலி மசூதியில், அஞ்சுவுக்கும், சரத்துக்கும், ஹிந்து முறைப்படி, வேத மந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மதத்தின் பெயரால், மக்களை பிளவுப்படுத்தும் முயற்சி நடந்து வரும் வேளையில், இந்த திருமணம் மகிழ்ச்சியளிக் கிறது' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
20-ஜன-202017:11:52 IST Report Abuse
Baskar இது தான் சில மக்களின் எந்த மாதமாக இருக்கட்டும் மன உறுதியுடன் திருமணம் செய்து கொண்டார்களே இதற்க்கு பெயர் தான் சமத்துவம் சகோதரத்துவம் என்பது. இது சில பேருக்கு புரிந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜன-202016:18:10 IST Report Abuse
Endrum Indian இதில் உள்ள நல்லது முஸ்லீம் ஜமாத் பணம் கொடுத்து இந்த திருமணத்தை மசூதியில் நடத்தியது. கெட்டது- 10 சவரன் நகையும் , 2லட்சம் திருமணப்பொருளும் ஏன் மனித மூளை ஆசைப்படுவதெற்கென்றே அமைந்தது அதற்குத்தகுதியானவர்கள் இவர்களா இல்லவே இல்லை. மிகவும் ஏழையானவர்கள் இப்படி தமுக்கடித்து இவ்வளவு செலவு செய்து அந்த திருமணம் நடைபெறக்கூடாது 2) அந்த பைய்யன் எனக்கு பெண்ணை திருமணம் மட்டும் செய்து கொடுங்கள் பொன் , பொருள் ஏதும் எனக்கு தேவையில்லை நான் சம்பாதித்து நான் குடும்பம் நடத்துகின்றேன் என்று சொல்லி இந்த திருமணத்தை செய்து கொண்டிருக்க வேணும். 3) ஜமாத்து சும்மா விட்டுருமா இவ்வளவு செலவு செய்த பின் ஒன்று முஸ்லிமாக மாறு என்று சொல்லும் இல்லை அதை வெளியில் காண்பிக்காமல் நடத்தும் 4) திருமணம் முஸ்லிம்களுக்கே எனக்கு தெரிந்து மசூதியில் நடப்பதில்லை ஏன் மசூதியில் இறந்தவர்களை புதைத்து அதை ஒரு மயானமாக வைத்திருப்பதால் அதுவும் இந்து திருமணம் ஒருக்காலும் மயானத்தில் நடை பெறுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X