பொது செய்தி

தமிழ்நாடு

'அலர்ட்!' தென் மாநிலங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
அலர்ட் , தென்_மாநிலங்களில், பயங்கரவாதி, பாதுகாப்பு ,வாக்குமூலம் , அச்சுறுத்தல்

பயங்கரவாதிகளால் தென் மாநிலங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது, கைதானோர் அளித்த வாக்குமூலம் வாயிலாக தெரிய வந்துள்ளது. குடியரசு தின விழா நெருங்கி வருவதால், பயங்கரவாதிகளின் சதியை முறியடிக்கும் வகையில், உஷார் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அண்டை நாடான இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பில், 2019ஏப்., 21ல், ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் நடந்தபோது, தேவாலயம், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில், மர்ம நபர்கள் வெடிகுண்டு மற்றும் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தினர். இதில், 253 பேர் கொல்லப்பட்டனர்; 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ஜஹ்ரான் ஹாசீம் என்ற பயங்கரவாதி தலைமையில், வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தாக்குதலுக்கு ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்றது. ஜஹ்ராம் ஹாசீம், வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் முன், பெங்களூரு, கேரளா மற்றும் சென்னை, மண்ணடியில் பதுங்கி இருந்துள்ளார்.

அவர், தென் மாநிலங்களில், இஸ்லாத்திற்கு எதிரான 'புனித போர்' என்ற அமைப்பையும் துவக்கி, சமூகவலைதளங்கள் வாயிலாக, இளைஞர்களை மூளைச்சலை செய்து, ஆட்களை சேர்த்துள்ளார்.அவர்களில் முக்கியமானவர், கோவையைச் சேர்ந்த, அசாருதீன், 32. அவரை, என்.ஐ.ஏ., எனும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஜூன், 12ல் கைது செய்தனர்.

அப்போது, ஜஹ்ரான் ஹாசீம் வழிகாட்டுதல்படி, அசாருதீன் தலைமையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள, தேவாலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், அசாருதீன் தலைமையில், 17க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.அவரது தலைமையில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளான, சையது அலி நவாஸ், 25; அப்துல் சமீம், 25; காஜா மொய்தீன், 47, உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர், 2014ல், திருவள்ளூர் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார், 47, கொலை வழக்கில் சிக்கினர்.

இவர்கள் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமினில் சென்ற சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை, தமிழக, 'கியூ' பிரிவு போலீசார் தேடி வந்தனர்.


மூன்று பேர் கைது



இந்நிலையில், இம்மாதம், 7ம் தேதி, பெங்களூருவில் பதுங்கி இருந்த, சையது அலி நவாஸின் கூட்டாளிகள் முகமது ஹனீப்கான், 29, உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும், டில்லியில், சையது அலி நவாஸ், காஜா மொய்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், தலைமறைவாக இருந்த அப்துல் சமீம் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்க, இம்மாதம், 8ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், சிறப்பு எஸ்.ஐ., வில்சன், 57, என்பவரை சுட்டுக் கொன்றனர்.இதுதொடர்பாக, அப்துல் சமீம், தவுபீக், மெகபூப் பாஷா, இஜாஸ் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இருவரை போலீசார் கைது செய்து இருப்பதாக கூறப்படுகிறது.போலீசாரிடம் பயங்கரவாதிகள் அளித்துள்ள வாக்குமூலம்:தென் மாநிலங்களில், ஐ.எஸ்., அமைப்பு தடம் பதிக்க முயற்சி செய்து வந்தது. எங்களை போன்றோர், அந்த அமைப்பில் சேர்ந்தோம். பெங்களூருவில் வெடிகுண்டு தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளையும் பெற்றோம்.


விசாரணை



தென் மாநிலங்களில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வந்தோம்.குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தும்படி, ஐ.எஸ்., அமைப்பு கட்டளையிட்டு இருந்தது.அதற்காக, பெங்களூரு,டில்லி, உ.பி.,யில் பதுங்கி இருந்தோம். இவ்வாறு, அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.இந்நிலையில், சிறப்பு எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை, என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்ற, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


பலத்த பாதுகாப்பு



மேலும், குடியரசு தின விழா நெருங்குவதால், நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதற்கேற்ப, பாதுகாப்பு ஏற்பாடுகள் நாளுக்கு நாள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளால், தென் மாநிலங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது, அவர்களின் வாக்குமூலம் வாயிலாக தெரிய வந்துள்ளதால், தென் மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.மத்திய, மாநில உளவு போலீசார், கியூ மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


பயங்கரவாதிகளுக்கு, 'சிம் கார்டு 'காஞ்சியில் கில்லாடித்தனம்

பயங்கரவாதிகளுக்கு, காஞ்சிபுரத்தில் இருந்து, 'சிம் கார்டு' வழங்கப்பட்டதாக கிடைத்த தகவலின்படி, கியூ பிரிவு போலீசார் விசாரணையை, தீவிரப்படுத்தி உள்ளனர்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர், காமாட்சி அம்மன் கோவில் சன்னிதி தெருவில், மொபைல் நிறுவனம் ஒன்றின், சிம்கார்டு ஏஜென்சி நடத்தி வந்தார்.

அவரிடம் இருந்து, சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், ஒரு மாதத்திற்கு முன், நான்கு, சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். அவர் சென்னையில், சாலையோரம் குடை வைத்து, சிம் கார்டு விற்பனை செய்து வந்தார். அவரிடம் இருந்து, தகுந்த முகவரி ஆதாரம் இன்றி, 'சிம்'கார்டுகளை வாங்கி உள்ளனர்.முகவரி இன்றி, சிம் கார்டுகளை விற்பனை செய்து வந்தது, அந்நிறுவன மேலாளருக்கு தெரிய வந்தது.

அவர் அளித்த புகாரின்படி, ராஜேஷிடம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், முறையான ஆவணங்கள் இன்றி, சிம்கார்டு விற்பனை செய்தது உறுதியானதால், காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன்; சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், சாகுல் அமீது, காஜா மைதீன் ஆகிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முறையான ஆவணங்கள் இன்றி, அவர்கள் விற்ற, சிம் கார்டுகள் பலருக்கு கைமாறியது விசாரணையில் தெரிய வந்தது.

சமீபத்தில், பெங்களூரு மற்றும் டில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பயன்படுத்திய, சிம் கார்டுகள் காஞ்சிபுரத்தில் இருந்து வாங்கப் பட்டது என, தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, கியூ பிரிவு போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்


பயங்கரவாத தடுப்பு போலீஸ் ஸ்டேஷன் முதன்முறையாக கேரளாவில் அமைப்பு



நாட்டிலேயே முதல் முறையாக, கேரளாவில், பயங்கரவாத தடுப்பு போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அம்மாநில அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் கேரளாவில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கென தண்டர்போல்ட் என்ற தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளை விசாரிக்க, தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டு அமலில் உள்ளது.இந்நிலையில், பயங்கரவாதம் மற்றும் தேசவிரோத சக்திகளை ஒடுக்க, சிறப்பு போலீஸ் ஸ்டேஷன் அமைக்க, ஜன., 4 ல் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த பயங்கரவாத தடுப்பு போலீஸ் ஸ்டேஷன், எர்ணாகுளம் மாவட்டம், அங்கமாலி தாலுகாவில், நெடும்பச்சேரியில் அமைக்கப்பட உள்ளது.

அதில் எஸ்.பி., அந்தஸ்தில், பொறுப்பு அதிகாரி இருப்பார். உளவு, புலனாய்வு, நடவடிக்கை என, மூன்று பிரிவுகளை கொண்டதாக, இந்த ஸ்டேஷன் இருக்கும். ஒரு பட்டாலியன் ஆயுதம் தாங்கிய போலீசார், இந்த ஸ்டேஷனில் எப்போதும் பணியில் இருப்பர்.

மாநில போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும் வழக்குகளில், பயங்கரவாத அல்லது தேசவிரோத தொடர்புடைய வழக்கு என சந்தேகம் ஏற்படும் வழக்குகளை, இப்பிரிவு போலீசார் விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷன் விரைவில் செயல்படத் துவங்கஉள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
20-ஜன-202018:21:22 IST Report Abuse
RajanRajan ஸ்வீட்ச் கேரள தீவிரவாதிகள். NIA க்கு வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel
Krish - Bengalooru,இந்தியா
20-ஜன-202016:06:36 IST Report Abuse
Krish " என்று தணியும் இந்த சுதந்திர தாகம் " என்று பாடினார் பாரதி . இப்போது அவர் இருந்தால் இப்படி பாடியிருப்பார் ' எப்ப அழியும் இந்த தீவிரவாதம் ,பயங்கர வாதம் ' சுமார் இருபது சதவிகிதம் உள்ளபோதே நடந்தும் செயல்கள் இப்படி . ஒருவேளை 50 சதவிகிதம் ஆனால் .நினைக்கவே பயங்கரமாய் இருக்கிறது காஸ்மீரதில் இந்துக்கள் இல்லாது போனதுபோல் இந்தியாவும் ஆகும் '
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
20-ஜன-202012:40:20 IST Report Abuse
Ab Cd குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட , ஆயுதங்களுடன் கைது செய்யபட்ட தீவிரவாதிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X