அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு உத்தரவு திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (18+ 24)
Advertisement
 ஹைட்ரோ_கார்பன், ஸ்டாலின், காவிரி,அனுமதி,வேளாண் தொழில்

சென்னை:'ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதியஉத்தரவை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத் துக் கேட்புக் கூட்டமும் நடத்த தேவையில்லை என, சுற்றுச்சூழலையும், வெகுமக்கள் எண்ணத்தையும், மத்திய அரசு பின்னுக்கு தள்ளி, சிறுமைப்படுத்தி உள்ளது.காவிரி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில், ஏற்கனவே, 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.வேளாண் மண்டலம் என்பதற்கு பதிலாக, அதைப் பாழ்படுத்தி, ரசாயன மண்டலமாக்கும் மத்திய அரசு, இதுமாதிரி பின்னடைவான உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது.

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி, விவசாயிகளின் வயற்றில் அடித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நாசப்படுத்தும் இந்த அனுமதிகள், எதிர்கால சமுதாயத்தையும், தமிழகத்தையும் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு உள்ளாக்கும் செயல்.தமிழக வேளாண் தொழிலை முற்றிலும் சீர்குலைத்து, காவிரி டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச் செயல். ஆகவே, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை, மத்திய அரசு உடனே, திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202016:46:24 IST Report Abuse
Ganesan Madurai திராவிட திருடன். அய்யோக்கிய திராவிடன்
Rate this:
Share this comment
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
20-ஜன-202013:53:01 IST Report Abuse
Ganesh G கையெழுத்து போடும்போது 10 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அதனால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட்டு விட்டேன். அதனால் எடப்பாடி பதவி விலக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
20-ஜன-202013:12:57 IST Report Abuse
pattikkaattaan என்னவோ போ தலீவா... உங்க அப்பாரு காலத்துல உள்ள வுட்டீங்க... இப்போ குத்துது .. குடையுது ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X