பா.ஜ., தேசிய தலைவராக இன்று தேர்வாகிறார் நட்டா

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி : பா.ஜ.,வின் தேசிய தலைவராக, ஜே.பி.நட்டா, 49, இன்று(ஜன.,20) ஒருமனதாக தேர்வாகிறார்.






நாடு முழுதும், பா.ஜ.,வின், உட்கட்சித் தேர்தல்கள், பல மாதங்களாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கும், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான தலைவர், பொதுச் செயலர் உட்பட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகளை, மூத்த தலைவர் ராதா மோகன்சிங் தலைமையிலான குழு, மேற்பார்வையிட்டு வருகிறது. டில்லியில், பா.ஜ., தலைமை அலுவலகத்தில், தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடக்கிறது. தேசிய தலைவராக, தற்போதைய செயல் தலைவரான ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.





நட்டாவின் பெயரை, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில தலைவர்கள் வழிமொழிந்து, மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளனர். நட்டாவுக்கு எதிராக, வேறு யாராவது மனு தாக்கல் செய்தால், நாளை தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. ஆனால், பா.ஜ.,விடன் தேசிய தலைவர், எப்போதுமே ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவதே வழக்கம். அதனால், நட்டாவுக்கு எதிராக, வேறு யாரும் மனு தாக்கல் செய்யமாட்டார்கள் என, கருதப்படுகிறது. அதனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும்,இப்போதைய தலைவருமான அமித் ஷா ஆகியோர் முன்னிலையில், தேசிய தலைவராக,ஜே.பி.நட்டா ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





பா.ஜ., தலைவராக, கடந்த, 2014ல், அமித் ஷா பொறுப்பேற்றார், ஐந்தரை ஆண்டுகளில், பா.ஜ., பல மாநிலங்களில், சட்டசபை தேர்தல்களில் வென்றது; மத்தியில், ஆட்சியை தக்க வைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில், உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றார். இதையடுத்து, புதிய தலைவராக, ஜே.பி.நட்டாதேர்வாக உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - TMILNADU ,இந்தியா
20-ஜன-202014:17:29 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இரண்டாவது விபூதி பொட்டலம் முதல் பொட்டலம் அமித் ஷா
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
20-ஜன-202013:06:03 IST Report Abuse
Ab Cd அமித் சாவே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற நிலையில்.. இபோது என்னானது ஜே.பி.நட்டா
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
20-ஜன-202012:13:31 IST Report Abuse
Rengaraj தனது கட்சிக்கும் மாற்று கட்சியினருக்கும் மத்திய அரசுக்கும் ஒரு இணைப்பு பலமாக இருந்து கட்சி தலைவர் என்ற முறையில் நாட்டை முன்னேற்ற முழு பொறுப்புடன் செயல்படுவார் என்று நம்புவோம். வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X