50 லட்சம் ஊடுருவல் முஸ்லிம்கள் விரட்டப்படுவர்: பா.ஜ.,தலைவர்

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (44)
Advertisement

கோல்கட்டா: தேவைப்பட்டால் நாட்டில் இருந்து ஊடுருவல் முஸ்லிம்கள் விரட்டப்படுவர் என மேற்குவங்க மாநில பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.






மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: நாட்டில் 50 லட்சம் ஊடுருவல் முஸ்லிம்கள் அடையாளம் காணப்படுவர். தேவைப்பட்டால் அவர்கள் நாட்டில் இருந்து விரட்டப்படுவார்கள் முதலில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.. மாநிலமுதல்வர் மம்தா பானர்ஜி யாரையும் சமாதனப்படுத்த முடியாது.





மேலும் பொது சொத்தை அழிப்பவர்களை சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என கூறி இருந்தேன். பொது சொத்துக்களை அழிக்கும் இது போன்ற ஊடுருவல்காரர்களை என்ன செய்ய வேண்டும். அவர்களை சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்பதை நான் மீண்டும் கூறுவேன்.

உ.பி., அசாம், கர்நாடக மாநில அரசுகள் தேச விரோத சக்திகளின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதன் மூலம் சரியானதை செய்தன என கூறினார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
21-ஜன-202008:39:36 IST Report Abuse
oce ஆதிகாலந்தொட்டு இந்திய நில பரப்புக்குள் புகுந்தவர்கள் பாபர் முதல் கஜினிமுகமது வரை வட மேற்கு அரேபியர்கள்.அதை அடி சுவடாக பயன் படுத்தி வருபவர்கள் தற்போதைய பாகிஸ்தானியர். கைபர் போலன் கணவாய் வழியாக பௌர்ணமி இரவில் மந்தை மேய்ச்சலுடன் இந்தியாவுக்குள் புகுந்தவர்கள் மங்கோலியர்கள். அவர்கள் முழுமையான முகமதியர்கள் இல்லை. ரஷ்ய சீன வம்சாவளியிலிருந்து மங்கோலியராக பிறழ்ந்தவர்கள். இரு பாலருக்கும் கண் அமைப்பு மற்றும் முக பாவம்களில் வித்தியாசம் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
21-ஜன-202008:28:47 IST Report Abuse
oce ஜெர்மனி ஹாம்பரக் என்.கே. நீ தாண்டவக்கோனா பார்த்தசாரதியா அல்லது என்.கே வா. எது உண்மை அதை முதலில் சொல். விசா அகதிகள் இவை இரண்டும் அடிப்படையில் ஒன்று தான். இரண்டுமே இந்நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் இரு விதமான போக்கு. மாவு ஒன்று. தோசையும் இட்லியும் அதிலிருந்து வரும்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
21-ஜன-202008:22:53 IST Report Abuse
oce இந்திய பகுதியான மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம்கள் அருகிலுள்ள பங்களா தேஷிலிருந்து குடி பெயர்ந்தவர்களாக இருக்கலாம். இந்தியாவின் முஸ்லீம்களின் எண்ணிக்கை கணக்கு இந்தியா முழுமைக்கும் பரந்து விரிந்துள்ளது. மேற்கு வங்கம் மட்டுமல்ல. அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது விஷ பரீட்சை. இதை செய்தால் இதுவே இந்தியாவின் மற்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்களையும் பாதிக்கும். வளர்ச்சி பெற்று வரும் பாஜக இதை முதலில் கைவிட வேண்டும். நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் இந்நாட்டு மக்களே. மக்களை பிரித்தாலும் பூமி பிரியாது. குடி உரிமையை அவர்களுக்கு அளிப்பதுடன் இனி மேல் எந்த முஸ்லீம்களும் இந்தியாவுக்குள் நுழைந்து குடி ஏறாமல் பார்த்து கொள்வது அவசியமாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X