பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர்கள் செலவு ஒப்படைக்க தேர்தல் ஆணையம் கெடு

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (2)
Advertisement
LocalBodyElection,ElectionCommission,TamilNadu,TN,வேட்பாளர்கள், செலவு,கெடு

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பிப்., 2க்குள் செலவு கணக்கை ஒப்படைக்க, மாநில தேர்தல் ஆணையம், 'கெடு' விதித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில், 27 மாவட்டங்களில் உள்ள, 91 ஆயிரத்து, 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, டிச., 27, 30ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளை கைப்பற்ற, மொத்தம், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தலில் செய்ய வேண்டிய செலவு விவரங்களை, மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயித்து இருந்தது. செலவு கணக்கு விவரங்களை, உரிய படிவத்தில் பராமரிக்கவும் உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு, பராமரிக்கப்பட்ட கணக்கு நகல்களை, பிப்., 2குள் ஒப்படைக்க, ஆணையம் கெடு விதித்துள்ளது.





மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்கள், மாவட்ட ஊராட்சி செயலரிடமும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும் கணக்கு நகல்களை ஒப்படைக்க வேண்டும். ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலராக, பி.டி.ஓ.,விடம் ஒப்படைக்க வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது. செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், தேர்தலில் மூன்று ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜன-202007:44:14 IST Report Abuse
Babu இவங்க வேற, இடையிடையே, தேர்தல் ஆணையம் எவ்வளவு கறாராக தேர்தல் நடத்துகிறது என்பதைத்தான் ஊரறியுமே?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-ஜன-202007:40:42 IST Report Abuse
Mani . V சரிப்பா, எல்லோரும் செலவு கணக்கை ஐந்து வருடத்துக்குள் கொடுத்து விடுங்கள். சரியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X