சுலைமானியின் திக் திக் இறுதி நிமிடங்கள்: டிரம்ப் விளக்கம்

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (8)
Advertisement
Iran,QasemSoleimani,US_President,DonaldTrump,Trump,Soleimani, அதிபர், டிரம்ப், சுலைமானி

வாஷிங்டன்: ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை தாக்குதல் நடத்தி கொன்றது குறித்த விபரங்களை, அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கி உள்ளார்.

மேற்கு ஆசிய நாடான ஈராக் சென்றபோது, ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில், அமெரிக்கா சமீபத்தில் கொன்றது. இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து, இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், புளோரிடாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய டிரம்ப், தாக்குதல் நடத்தப்பட்ட விபரங்களை கூறியுள்ளார். ஊடகங்களுக்கு, இது தொடர்பான, 'ஆடியோ' கிடைத்துள்ளது.





அதில் டிரம்ப் கூறியிருப்பதாவது: சுலைமானியை இலக்காக வைத்து, ஆளில்லா விமானம் செலுத்தப்பட்டது. அப்போது நமது வீரர்கள், எனக்கு ஒவ்வொரு நொடியும், வர்ணனை அளித்தனர். 'இன்னும் ஒரு நிமிடம்தான் பாக்கி. 10, 9, 8...' என, கவுன்ட் - டவுன் கொடுத்தனர். அப்போது திடீரென, 'பூம்' என, சத்தம் கேட்டது. அவ்வளவு தான், சுலைமானி கொல்லப்பட்டார். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
21-ஜன-202008:12:48 IST Report Abuse
oce பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈரான் ஈராக் இத்தாலி மூன்றும் எகிப்திலிருந்து பிரிந்தவை. பெர்சியா என்பது பாரசிகமாகி பின் பார்சியானது. பார்சிகம் சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த வரலாற்றின் அடிப்படையில் பார்சி வம்சாவழி பெரோஸ் ஜஹாங்கீர் கான் இந்திராவை மணந்து இந்திய காங்கிரஸ் அரசியலில் பெரோஸ் காந்தியாக பெயரை மாற்றப்பட்டு எம்பி ஆகி இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
20-ஜன-202022:14:54 IST Report Abuse
Nallavan Nallavan டிரம்ப்பு இதைத் தன்னோட வாழ்நாள் சாதனையா சொல்லிக்கிட்டே இருப்பாரு போலிருக்கே ....
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
20-ஜன-202013:37:36 IST Report Abuse
pattikkaattaan எனக்கு ஒரு சந்தேகம் ... ஈரான் நமக்கு நட்பு நாடா இல்லை எதிரி நாடா ?.. ஏன் கேட்கிறேன் என்றால் இந்திய ரூபாயை வாங்கிக்கொண்டு நமக்கு எண்ணெய் கொடுக்கிறார்கள் மேலும் இந்தியா அங்கு துறைமுகம் கட்டுவதாகவும் செய்தி வந்தது ..
Rate this:
Share this comment
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
20-ஜன-202015:25:44 IST Report Abuse
Davamani Arumuga Gounder.. ஈரான் நமக்கு நட்பு நாடு என்பது மட்டுமல்ல... ஈரான் என்றழைக்கப்படும் பாரசீக நாட்டின் வம்சாவளியினர்... பார்சீக என்ற பார்ஸி இனத்தை சார்ந்த பெரோஸ் ஜஹாங்கிர் கான் என்பவரான பெரோஸ் காந்தி என்ற புனை பெயரில் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டவரும், அப்பழுக்கற்ற நேர்மையான, ஊழலுக்கு எதிரான, 1950 - 60 கால கட்டத்திலேயே நேருவின் ஆட்சியில் நடந்த ஊழல்களை பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தி, அதன் காரணமாக தன் மனைவி இந்திரா கான், மாமனார் ஜவஹர் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பை சம்பாதித்து, பெரும்பாலும் மனைவியை பிரிந்தே வாழ்ந்தவருமான பெரோஸ்கான் அவர்களின் மருமகள் - மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோர் இன்று தமது கணவர் - தந்தையின் தாய்வழி பாட்டனாரான நேரு வம்சத்தை சேர்ந்தவர்கள் ( வரலாற்று காலம் முதற்கொண்டு ஒருவரின் வம்சம் அல்லது மரபு என்பது தந்தை, தந்தையின் தந்தை, அவரது தந்தை இவர்களை வைத்துத்தான் உலகில் உருவாக்கப்பட்டுள்ளது.. ஆனால் இவர்களோ,, ராஜீவ் என்ற ஆணின் மனைவி - மக்கள் என்று கூறிக்கொள்கிறார்கள் சரி - ஆனால் அவரது தந்தையான பெரோஸ் காந்தி - பெரோஸ் கான் என்ற ஆணின் .. வம்சம் - மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் என்று கூற மறுத்து.. இந்திராவின் மருமகள் - பேரக்குழந்தைகள் என்றுதான் கூறுகிறார்கள் ) ..என்று பிரகடனப்படுத்திக்கொண்டு... ஊழலின் ஊற்றுக்கண் ஆக உள்ளார்களே .. அவர்களின் தாய்நாடுதான் இன்று ஈரான் என்றழைக்கப்படும் பாரசீகம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X