ஹர்திக் படேலை சீண்டுகிறது பாஜ: பிரியங்கா குற்றச்சாட்டு

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (30)
Advertisement
BJP,HardikPatel,Priyanka,harassing,Congress, பிரியங்கா, ஹர்திக்படேல், காங்கிரஸ், பாஜ, பாஜக

புதுடில்லி: ' ஹர்திக் படேலை பா.ஜ. தொடர்ந்து துன்புறுத்தி சீண்டி வருகிறது' என காங்., பொதுச் செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு படேல் சமூகத்தினர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. பேரணிக்கு தலைமை வகித்த ஹர்திக் படேல் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது. கடந்த பார்லி., தேர்தலுக்கு முன்பாக ஹர்திக் படேல் காங்., கட்சியில் இணைந்தார். இந்நிலையில், தேசவிரோத வழக்கில் ஹர்திக் படேல் ஆஜராகத் தவறியதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு காங். பொதுச் செயலர் பிரியங்கா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.





அவரது டுவிட்டர் பதிவு: விவசாயிகளின் உரிமைக்காகவும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் போராடி வரும் ஹர்திக் படேலை பா.ஜ. தொடர்ந்து துன்புறுத்தி சீண்டி வருகிறது. ஹர்திக் படேல் செய்வதையெல்லாம் தேசத்துரோகம் என பா.ஜ. கூறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


சட்ட புரிதல் இல்லை:


பிரியங்காவின் கருத்து குறித்து பா.ஜ., தலைவரும் குஜராத் துணை முதல்வருமான நிதின் படேல் கூறியதாவது: பிரியங்காவுக்கு சட்ட புரிதல் வேண்டும். வழக்கு விசாரணையில் ஆஜராகாத ஹர்திக்கை, கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது சட்ட நடவடிக்கை. இதில் மாநில அரசு, போலீசாரின் பங்கு எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
20-ஜன-202018:06:08 IST Report Abuse
K E MUKUNDARAJAN யாரு அவரு ? அட்ரஸ் என்ன? ஏனம்மா எங்களை இந்தமாதிரியெல்லாம் பேசி குழப்புகிறாய்?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஜன-202017:58:13 IST Report Abuse
Cheran Perumal உனக்கு எங்கே நோகுது?
Rate this:
Share this comment
Cancel
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
20-ஜன-202015:09:11 IST Report Abuse
Davamani Arumuga Gounder இப்படித்தான்.. அகாலிதளத்திற்கு எதிராக '' லோங்கோவால், லோங்கோவாலுக்கு எதிராக பிரந்தரன் வாலே '' ஆகியோர்களை சீக்கிய மதத்திற்குள் உருவாக்கி கொம்பு சீவிவிட்டு, பின்னர் அவர்களாலேயே பலியானார் ... இந்தியாவின் இரும்புப்பெண்மணி.. '' ஶீமதி. இந்திரா கான் ''
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X