அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர் ரஜினி பேச்சு: எச்.ராஜா ஆதரவு

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (96)
Advertisement
HRaja,Rajini,BJP,Rajinikanth,பாஜ,ரஜினி,ராஜா,எச்ராஜா

காஞ்சிபுரம்:''ஈ.வெ.ரா., குறித்து, நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு, சட்டரீதியாக, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது,'' என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று தரிசனம் செய்த பின், எச்.ராஜா கூறியதாவது: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்ற, சந்தேகப்படும்படியான நபர்கள், புகைப்படம் எடுத்தது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோவிலில், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுத்துச் சென்ற, சந்தேகத்துகுரிய நபர்களை கைது செய்து, விசாரிக்க வேண்டும்.

சிறப்பு எஸ்.ஐ., வில்சன் கொலைக்கும், பெங்களூரு மற்றும் டில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. ஹிந்து கடவுளை ஈ.வே.ரா., இழிவுபடுத்தியவர். அவரின், ஹிந்து விரோத நடவடிக்கையில் ஒரு சிலவற்றைத்தான், ரஜினி கூறியிருக்கிறார். இதனால், ரஜினி மீது சட்டரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.





பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டில் கொடுமை படுத்தப்பட்டு, அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில், யாருக்கு, என்ன பாதிப்பு இருக்கிறது. அல் உம்மா, சிமி போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழகத்தில், அல் உம்மா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் கூட்டு சேர்ந்து, சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு, எச்.ராஜா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
20-ஜன-202021:24:14 IST Report Abuse
தமிழ்வேள் 1971 -சேலத்தில் நடந்த ராமபிரான் அவமதிப்பு முற்றிலும் உண்மை .....கடந்த வாரத்திலிருந்து இன்று வரை இது தொடர்பில் நடந்த எந்த ஒரு நிகழ்வு வாத பிரதிவாதங்களிலும் கருத்து சொல்லாமல் சூடு பட்ட குரங்கு போல அமைதியாக இருப்பது நாரமணி ...நன்கு கவனித்து பாருங்கள் ...இந்து மத அவமதிப்புக்கு முந்திரிக்கொட்டை போல ஓடிவந்து கருத்து சொல்லும் ஓசி பிரியாணி இன்றுவரை வாயே திறக்கவில்லை ..இருக்கும் இடமே தெரியவில்லை ......அந்த பாவகரமான நிகழ்வை கட்டமைத்த பாவிகளுக்குள் பெரும்பாவி அந்த ஆள்தான் ....ஏதாவது சொல்லப்போக முதுகில் டின் கட்டிவிடுவார்கள் என்ற பயம் போலும்
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
20-ஜன-202019:50:26 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு என்ன சார் சொல்லுவது இங்கே உள்ள அந்தணர் தவிர கோயிலுக்குள் செல்ல நம்மை விட்டார்களா அந்த உரிமையை பெற்று தந்தது பெரியார் அதற்கு நன்றி செலுத்துவோம் அவர்கள் ஜாதி தான் அரசு வேலை செல்ல உயர் படிப்பு படிக்க என்ற நிலை மாற்றியவர் கலைஞர் பின்னர் அவர் மீது கோவம் வராது வந்தேறிகளுக்கு
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
21-ஜன-202010:42:24 IST Report Abuse
blocked userபெரியார் வெள்ளைக்காரர்களிடம் இருந்த ஒரு சாதாரண அடியாள். அன்னை மீனாட்சியின் மூக்குத்தி பற்றி பேசிவிட்டு துண்டைக்காணும், துணியைக்காணும் என்று ஓடிவந்தனர் மதுரைப்பக்கம் வரவேயில்லையாம். ஆலயப்பிரவேசம் பலர் செய்து இருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
chenar - paris,பிரான்ஸ்
22-ஜன-202002:16:59 IST Report Abuse
chenarவெள்ளைக்காரர்களிடம் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்து காட்டிக்கொடுத்த அனைவருமே பிராமணர்கள்தான் .....
Rate this:
Share this comment
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
20-ஜன-202019:38:25 IST Report Abuse
K.P  SARATHI இந்து மதத்தை இவ்வளவு கேவலமாக ஊர்வலம் நடத்திய பெரியார் பற்றி ரஜினி பேசியது தவறு இல்லை. இப்பொழுது இந்துக்கள் முடிவு என்ன . இன்னும் மௌனம் ஏன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X